2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

இந்தவார பலன்கள் (07.07.2013 - 13.07.2013)

A.P.Mathan   / 2013 ஜூலை 06 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இந்தவார பலன்கள் (07.07.2013 - 13.07.2013)
 
 
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அசாத்தியமான துணிச்சலை கொண்ட மேட ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் குடும்பத்தில் பெற்றோர்களுடன் அதிக கருத்து வேறுபாடுகள் காணப்படும். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவு குறைந்து காணப்படும். பெரியவர்களின் சொல்லுக்கு மரியாதை கொடுப்பது நன்மை தரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். தொடர்ந்து வந்த மன அயர்ச்சி மற்றும் நம்பிக்கை அற்ற தன்மை மாறும். குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிதாக பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். பெண்கள் வழியில் உள்ள உறவினர்களிடையே மதிப்பு கூடும். மகிழ்ச்சியான வாரம் இது.
 
அதிர்ஷ்ட திகதி : 11
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)
 
 
 
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

பட்ஜட் போட்டு செலவு செய்யும் இடப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நலம். கணினி துறையில் உள்ள சிலருக்கு இடமாற்றம்  மற்றும் பயணம் அமையும். அடிக்கடி மருத்துவ செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். யோகா தியானப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. ஆனாலும் வார இறுதியில் பணவரவு திருப்திகரமாய் அமையும். தொழிலில் நல்ல மாற்றம் மற்றும் புது தொழிலில் லாபம் அமையும். எங்கு சென்றாலும் உங்களுடைய மதிப்பு, மரியாதை கூடும். உங்களுடைய மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பெண்களுக்கு தடைப்பட்ட காரியங்கள் முடிவுக்கு வரும். வார இறுதி உங்களுக்கு மகிழ்வை தரும்.
 
அதிர்ஷ்ட திகதி : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

நட்பை பெரிதாக மதிக்கும் மிதுனம் ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் நிதி நிலைமை திருப்தி தரும். உத்தியோகம் பார்க்கும் பெண்களில் சிலருக்கு சம்பள அல்லது பதவி உயர்வு கிடைக்கும். விளையாட்டு துறைகளில் உள்ளவர்களுக்கு பரிசுகள் கிடைக்கும். அரசு துறையில் உள்ளவர்கள் சில விடயங்களை சாதித்துக் காண்பிப்பீர்கள். ஆண் பிள்ளைகளிடம் அலட்சியப்போக்கு காணப்படும். பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய வழிகள் பிறக்கும். உழைப்பும் பொறுப்பும் அதிகரித்த நிலையிலேயே இருந்து வரும். பணிபுரியும் இடத்தில் பொறுமையும் நிதானமும் அவசியம். வரவும் செலவும் சமமாக இருக்கும்.
 
அதிர்ஷ்ட திகதி : 9
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
 
 
 
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

தியாக உணர்வும் உதவும் குணமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொழிலதிபர்கள் மேலும் தொழிலை விரிவுபடுத்தலாம். நீதிமன்ற விவகாரங்களில் நல்ல திருப்பம் கிடைக்கும். தவிர்க்க முடியாத பயணம் அமையும். கடிதங்கள் சுபசெய்தியை கொண்டு வந்து சேர்க்கும். உறவினர்கள் சந்தித்து மகிழும் வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் நற்பெயரைப் பெறுவீர்கள். புதிய முயற்சிகள் கைகூடும். பணவரவு மிக அதிகமாக இருக்கும். குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றம் காண முடியும். இருந்த போதிலும் வார இறுதியில் சரியான முடிவு எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பலரின் ஆலோசனைகள் உங்களை தடுமாற்றத்திற்கு கொண்டு செல்லும். போராடினால் மட்டுமே வெற்றி உண்டாகும்.
 
அதிர்ஷ்ட திகதி : 10
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தலைமை குணமும் அடுத்தவர்களுக்கு உதவும் குணமும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் சொத்துக்களினால் வந்த ஆதாயம் குறையும். தொழிலதிபர்களுக்கு உற்பத்தி திறன் குறையும். உடல் சோர்வும் மன சோர்வும் உண்டாகும். யாரையும் நம்பி தற்சமயம் பண உதவி செய்ய வேண்டாம். கவனமாக செயல்படவும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. பணியாளர்களுக்கு பணியிடத்தில் அதிக மதிப்பு கூடும். என்றாலும் பொருட்களை வாங்குவது விற்பதில் கவனமாக செயல்பட வேண்டி வரும். கிடைத்த வேலைகளை செய்வது நல்லது. படிப்பில் கூடுதல் கவனம் தேவை. பணியில் உள்ள பெண்மணிகளுக்கு பொறுமை அவசியம். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். இந்தவாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 10
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கடுமையான உழைப்பும் சிக்கனத்தை உயிர் மூச்சாக கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியம். குடும்பத்தில் பெற்றோர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் விற்பனையின் மூலம் ஆதாயம் உண்டு. உணவு விடயத்தில் கவனம் தேவை. பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வழக்கில் சாதகமான முடிவுகள் காணப்படும். நிர்வாகத்தினருடைய ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். தொழிலில் திடீர் வளர்ச்சி உண்டாகும். புதிய வியாபார உக்திகள் உண்டாகும். சில பெரிய பொறுப்புக்கள் தேடி வரும். இந்தவாரம் மகிழ்ச்சியாகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 12
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.

மற்றவர்களுக்கு சென்று உதவக்கூடிய துலா ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடைபெறலாம். வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும். பெண்களின் நீண்ட நாள் கனவுகள் நினைவாகும். உடலில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கப் பெறுவீர்கள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கடினமான காரியத்தையும் எளிதாக முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். ஆனாலும் வார இறுதியில் வாகனங்கள் ஓட்டுவதில் அதிக கவனம் தேவை. எதிர்ப்புகள் சமாளிக்கப்படும். பயணத்தில் எடுத்து செல்லும் பொருட்கள் மீது கவனம் தேவை.
 
அதிர்ஷ்ட திகதி : 11
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

அதீத உள்ளுணர்வு சக்திகளை தன்னகத்தே கொண்ட விருட்சிக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தடைப்பட்ட சுபகாரியங்கள் முடியும். சேமிப்பு சாத்தியமாகும். சிலருக்கு பதவி உயர்வு, அனுகூலமான இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். கணவன் - மனைவியிடையே அன்பு பலப்படும். பெற்றோர்களின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பு கொடுப்பார்கள். உங்களிடம் ஒருவிதமான தெளிவு காணப்படும். எதிர்மறையான எண்ணங்கள் விலகும். தன்னிச்சையாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இந்தவாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 12
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம் : குருபகவான்
 
சந்திராஷ்டமம்:
ஜூலை 06ஆம் திகதி மாலை 03.22 மணியிலிருந்து ஜூலை 08ஆம் திகதி காலை 04.06 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
 
 
மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

கொள்கையை காப்பாற்ற போராடும் குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. சிலர் கட்டாய விடுப்பில் செல்ல நேரிடும். அலட்சியமான மனோபாவத்தை தவிர்ப்பது நல்லது. முன்னரே திட்டமிடாததால் சிரமத்திற்கு ஆளாவீர்கள். அனாவசியமான பயங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். ஆனால் வார இறுதியில் புது பதவிகளும் பொறுப்புக்களும் கூடி வரும். அயல் நாட்டு வாய்ப்புகள் வீடு தேடி வரும். பயணங்களால் ஏற்பட்ட அலைக்கழிப்புக்கள், அலைச்சல்கள் ஆகியவை குறையும். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். கடினமான சில வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். மூத்தவர்கள் சில நுணுக்கங்களைக் கற்றுத் தருவார்கள்.
 
அதிர்ஷ்ட திகதி : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
சந்திராஷ்டமம்:
ஜூலை 08ஆம் திகதி காலை 04.06 மணியிலிருந்து ஜூலை 11ஆம் திகதி மாலை 03.48 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
 
 
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

உழைக்கும் பாட்டாளி மக்களின் உரிமைக்காக போராடும் மகர ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் சிலருக்கு அரசு மற்றும் காவல்துறை தொடர்பான நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு. மருத்துவ செலவுகள் சற்று தலை தூக்கும். புதிய வேலை வாய்ப்புக்களை தேடி செல்ல நேரிடும்.  குடும்பத்தில் வாக்குவாதங்கள் வந்து போகும். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம்.  உத்தியோகத்தில் சின்ன சின்ன எதிர்ப்புக்கள் இருக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருப்பது நல்லது. மறதியால் விட்டுப்போன காரியம் ஒன்றை மீண்டும் செய்து முடிக்கும் எண்ணம் மேலோங்கும். மாணவர்களுக்கு நன்மை.
 
அதிர்ஷ்ட திகதி : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
சந்திராஷ்டமம்:
ஜூலை 11ஆம் திகதி மாலை 03.48 மணியிலிருந்து ஜூலை 13ஆம் திகதி காலை 01.43 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
 
 
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

லாபம் சம்பாதிப்பதில் தீர்க்கமான அறிவுடைய கும்ப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உண்டாகும். மனைவியின் மூலம் நல்ல யோகம் ஏற்படும். பழைய வழக்குகளில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். நல்லவர்களின் சேர்க்கை நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகள் கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதால் விருப்பங்கள் நிறைவேறும். வரவைவிட செலவு கூடினாலும் சேமிப்பில் ஒன்றும் குறையாது. வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் வந்து சேரும். மனதிற்கு இனிய நிகழ்வு ஒன்று நடைபெறும்.
 
அதிஷ்ட திகதி : 2, 11, 20, 29
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)
 
 
 
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

வார்த்தை ஜாலத்தினால் காரிய ஜெயம் அடைய கூடிய மீனம் ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வழக்குகளில் வெற்றி கிட்டும். நிலம், சொத்து சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனக் குழப்பங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் நீங்கும். செய்ய மறந்த காரியம் ஒன்றை துரிதமாக செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின் விமர்சனங்களை பொருட்படுத்த மாட்டீர்கள். உற்சாகத்தோடு செயல்படும் நாள். நட்பு வட்டம் விரிவடையும் நாள். உற்றார் உறவினர்களை கண்டு மகிழும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரலாம். மகிழ்ச்சியான வாரம் இது
 
அதிர்ஷ்ட திகதி : 13
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X