2022 ஜனவரி 22, சனிக்கிழமை

இந்தவார பலன்கள் (15.12.2013 - 21.12.2013)

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இந்தவார பலன்கள் (15.12.2013 - 21.12.2013)
 
மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
தைரியத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் பெயர்பெற்ற மேட ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும். பணியில் உயர் அதிகாரிகள் பாராட்டுக்கள் கிடைக்கும். பெண்கள் குடும்ப முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு பாடுபடுவார்கள். வெளிநாட்டு செய்திகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறும். அரசினருடன் சுமூகமான போக்கு காணப்படும். காரியத்தில் வெற்றிகள் உண்டாகும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும் வார குடும்பத்து பெரியவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வது நல்லது. உடல் சூடு காரணமாக காயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சில குழப்பங்கள் வந்து வந்து நீங்கும். இந்த வாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும். 
 
அதிர்ஷ்ட திகதி : 15
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம் : குருபகவான்
 
 
 
இடபம் 
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
தங்களுடைய நகைச்சுவை பேச்சாலும் புத்திசாலித்தனத்தாலும் மற்றவர்களை தங்கள் வசப்படுத்தும் இடப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். பதவி உயர்வுக்கான பேச்சுவார்த்தைகள் காணப்படும். புதிய உக்திகளை செலுத்தி வெற்றி காண்பீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் நடத்துவதில் உறவினர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் மதிப்பைப் பெறுவீர்கள். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். பயணங்கள் பயனுடையதாய் இருக்கும். பொழுதுபோக்குகளில் ஈடுபடுவீர்கள் கவனம் தேவை. தேவையில்லாத பயங்கள் மன வேதனையைக் கொடுக்கும். எனவே ஆலய தரிசனம் செல்வது நலம். 
 
அதிர்ஷ்ட திகதி : 21
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)
 
 
 
மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
பிறர் மனம் நோகாமல் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு தாய் வழி உறவில் நன்மை உண்டாகும். நல்ல நண்பர்கள் வருகை இருக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி மற்றும் செலவுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கையும் மனதைரியமும் மிகும். தொழிலில் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். ஆனால் வார இறுதியில் தங்களது திட்டங்களை எதிர்பாராது மாற்றி அமைக்க வேண்டி இருக்கும். பணியில் தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்வதற்காக அலைச்சல்கள் பட வேண்டி இருக்கும். அலுவலக பணிகளில் சிலரின் கோபங்களுக்கு ஆளாக நேரிடும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.  
 
அதிர்ஷ்ட திகதி : 16
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல் 
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்) 
 
 
 
கடகம் 
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
 
கருணை உள்ளமும் கண்டிப்பும் மிகுந்த கடக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். ஏற்றம் தரும் வகையில் வருமானம் வரும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணத்தட்டுப்பாடுகள் காணப்படும், இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். விரிவாக்கப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. முயற்சியின் மூலம் மட்டுமே வெற்றியை அடையலாம். பணியில் உயர் அதிகாரிகள் பாராட்டுக்கள் கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும். பண விடயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. 
 
அதிர்ஷ்ட திகதி : 19
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)
 
 
 
சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
துணிச்சலுக்கும் விடாமுயற்சிக்கும் பெயர் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடுவீர்கள். இவ்வளவு நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும். தொழிலில் அதிக அளவில் ஆர்வம் காணப்படும். தவிர்க்க  முடியாத சில பயணங்கள் உண்டாகும். சிலரின் பேச்சுக்கள் எரிச்சலைக் கொடுக்கும். மாற்றுத் தொழிலில் கவனம் செலுத்தி லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். அனுபவசாலிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றி வெற்றி கொள்வீர்கள். வரவிற்கேற்ற செலவுகள் காணப்படும். எந்த சூழலிலும் உங்களுடைய பிரச்சினைகளை வெளிப்படுத்த வேண்டாம். 
 
அதிர்ஷ்ட திகதி : 17
அதிர்ஷ்ட நிறம் : கறுப்பு தவிர 
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா
 
 
 
கன்னி 
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
கண்ணியமும் கலை ரசனையும் மிகுந்த கன்னி ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். சில நல்ல நண்பர்களின் உதவிகள் மகிழ்ச்சியுடையதாக இருக்கும். இனிமையாக பேசி மற்றவர்களைக் கவர்ந்து லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். வரவிற்கேற்ற செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் அமைதியான போக்குகள் காணப்படும். பணத்தட்டுப்பாடுகள் வந்து நீங்கும். பெண்கள் சுய தொழிலில் லாபம் கிடைக்கப்பெறுவார்கள். சில முக்கிய பணிக்காக உங்கள் சேமிப்புக்கள் குறையும். அரசியல் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். பணியாளர்கள் மத்தியில் சுமூகமான போக்கு காணப்படும்.
 
அதிர்ஷ்ட திகதி : 17
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.
 
நியாயம் ஒன்றே உயிர் மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புக்கள் நீங்கும். பயணங்கள் அலைச்சல் உடையதாகவே அமையும். யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது. வியாபாரம் சம்மந்தமாக புதிய கிளைகளை தொடங்க முயற்சி செய்வீர்கள். செலவுகள் கூடுதலாக இருக்கும், சிக்கனம் தேவை. அலைச்சலினால் உடலில் சிறிது அசௌகர்யம் காணப்படும். அனாவசிய பேச்சுக்களை தவிர்ப்பதால் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். ஓரளவு பண வரவின் மூலம் திருப்தி காணப்படும். மனதில் குழப்பம் மற்றும் மனக்கசப்புகள் உண்டாகும். இல்லத்தில் உள்ள பெண்களினால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியம்.
 
அதிர்ஷ்ட திகதி : 18
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
சந்திராஷ்டமம்: 
டிசெம்பர் 14ஆம் திகதி காலை 12.17 மணியிலிருந்து டிசெம்பர் 17ஆம் திகதி காலை 11.37 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
 
 
விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
 
தனது திறமையால் முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விருச்சிக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்புக்கள் வந்து சேரும். வியாபாரிகளின் லாபம் சுமாராக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வெளியூரிலிருந்து சுப செய்திகள் வந்து சேரும். நவீன உக்திகள் மூலம் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியைத்தரும். பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக இடமுண்டு.
 
அதிர்ஷ்ட திகதி : 18
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
 
சந்திராஷ்டமம்: 
டிசெம்பர் 17ஆம் திகதி காலை 11.37 மணியிலிருந்து டிசெம்பர் 19ஆம் திகதி காலை 12.00 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
 
 
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
சோதனைகளையும் சாதனைகளாக்கும் தனுசு ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் ஆரோக்கியத்துடன் இருப்பதால் கடமையில் ஆர்வம் பிறக்கும். லாபம் சுமாராக இருக்கும். அரசினரால் கிடைக்கப் பெறும் செய்திகள் அனுகூலமாக இருக்கும். பிறரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். மற்றவர்களுக்கு உதவி செய்து அதில் திருப்தி காண்பீர்கள். விழிப்புணர்வுடன் இருப்பதால் சில இழப்புக்களைத் தவிர்கலாம். எடுத்த காரியத்தில் வெற்றியடைதல். மனமகிழ்ச்சி உண்டாகும். அரசாங்கத்தினரால் ஆதாயம் காணப்படும். உற்சாகம் காணப்படும். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காணப்படும். வாகன யோகங்கள் உண்டாகும்.
 
அதிர்ஷ்ட திகதி : 19
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)
 
சந்திராஷ்டமம்: 
டிசெம்பர் 19ஆம் திகதி காலை 12.00 மணியிலிருந்து டிசெம்பர் 22ஆம் திகதி மாலை 12.38 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
 
 
மகரம் 
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆ-ம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
நிதானமாக செயல்பட்டு நினைத்ததை அடையும் மகர ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் விரும்பிய இடமாற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிரமம் இருக்காது. வீடு வாங்கும் எண்ணம் கொண்டவர்கள் அதற்குரிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை பரிசாக பெருவீர்கள். அனுபவசாலிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றி வெற்றி கொள்வீர்கள். பேச்சு மற்றும் செயல்களில் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறுவீர்கள். பணத்திற்கு சில தட்டுப்பாடுகள் காணப்படும். எதிர்பார்த்த செய்திகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். புதிய வேலைக்கான ஏற்பாடுகள் முன்னேற்றம் கொடுக்கும். 
 
அதிர்ஷ்ட திகதி : 19
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
 
 
 
கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
பொறுமையின் சிகரமாகத் திகழும் கும்ப ராசி அன்பர்களே..!
 
விளையாட்டுக்களினால் உடல் சோர்வு உண்டாகும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. வீணான மன பயங்கள் உண்டாகும். வயிற்றில் உபாதைகள் தோன்றி மறையும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. வேலையில் சில தவறுகள் உண்டாகும். மனதளவில் துக்கம் காணப்படும். எந்த ஒரு விடயத்தையும் மனம் இன்றியே செய்து முடிப்பீர்கள். வார பெண்களுக்கு தலைமைக் பொறுப்புக்கள் கூடி வரும். நவீன உக்திகளால் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். 
 
அதிர்ஷ்ட திகதி : 20
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
 
மீனம் 
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.
 
சொல்லிலும் செயலிலும் தனிமுத்திரை பதிக்கும் மீன ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உறவினர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். பணியாளர்களுக்கு சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சுப செலவுகளை ஈடுகட்ட புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கடின உழைப்பால் விற்பனை அதிகரித்து லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். வரவிற்கேற்ற செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறலாம். சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை உருவாகும்.
 
அதிர்ஷ்ட திகதி : 21
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள் 
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X