2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

இந்தவார பலன்கள் (16.03.2014 - 22.03.2014)

A.P.Mathan   / 2014 மார்ச் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இந்தவார பலன்கள் (16.03.2014 - 22.03.2014)

மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தன்னை சார்ந்தவர்களுடன். ஒழிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் புதிய வேலைக்கான ஏற்பாடுகள் முன்னேற்றம் கொடுக்கும். எதிர்பார்த்த செய்திகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். அரசினருடன் சுமூகமான போக்கு காணப்படும். காரியத்தில் வெற்றிகள்  உண்டாகும். ஆனால் வார இறுதியில் தேவையில்லாத மருத்துவ செலவுகள் உண்டாகும். பெண்கள் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் சில குழப்பங்கள் உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலைகள் உண்டாகும். சில வகையில் வீணான அலைச்சல்கள் உண்டாகும். எனவே இந்த வாரம் இரண்டும் கலந்த பலன்களே காணப்படுகின்றன.

அதிர்ஷ்ட திகதி : 18
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்

சந்திராஷ்டமம்:
மார்ச் 21ஆம் திகதி காலை 10.18 மணியிலிருந்து மார்ச் 23ஆம் திகதி மாலை 03.07 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.



இடபம்
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக் கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் பயணங்கள் பயனுடையதாய் இருக்கும். தொழிலில் லாபம் உண்டாகும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். பதவி உயர்வுக்கான பேச்சுவார்த்தைகள் காணப்படும். தேவையில்லாத பயங்கள் உண்டாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனால் வார இறுதியில் போக்குவரத்தில் அதிக கவனம் தேவை. உடல் நிலையில் சிறு சிறு உபாதைகள் காணப்படும். துக்கமான நிகழ்ச்சிகள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும். வார இறுதி உங்களுக்கு கடினமாகவே இருக்கும்.

அதிர்ஷ்ட திகதி : 20
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)



மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் பெண்களுக்கு தன்னம்பிக்கையும் மனதைரியமும் மிகும். தாய் வழி உறவில் நன்மை உண்டாகும். தொழிலில் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள்.  பண விடயத்தில் கவனமாக இருப்பது அவசியம். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். அக்கம் பக்கத்தினரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பயணங்களினால் சிறிது உடல் சோர்வுகள் காணப்படும். பணியாளர்களுக்கு பணி சுமைகள் அதிகரிக்கும். எனவே இந்தவார வார இறுதி உங்களுக்கு சிரமமாகவே முடியும்.

அதிர்ஷ்ட திகதி : 18
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி



கடகம்
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

மென்மையான சுபாவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் உள்ளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. பேச்சுக்களில் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம். விரிவாக்கப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். பணவரவுகள் நன்றாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகள் உண்டாகும். கை, கால்களில் வலி உண்டாகும். இல்லத்தில் உள்ள பெண்களினால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். மனதில் குழப்பம் மற்றும் மனக்கசப்புகள் உண்டாகும். வார இறுதியில்  எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். ஏற்றம் தரும் வகையில் வருமானம் வரும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி : 20
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)



சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட  சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடுவீர்கள். இவ்வளவு நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும். தொழிலில் அதிக அளவில் ஆர்வம் காணப்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வரவிற்கேற்ற செலவுகள் காணப்படும். நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். எந்த சூழலிலும் உங்களுடைய பிரச்சினைகளை வெளிப்படுத்த வேண்டாம். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவி கிடைக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு லாபத்தைக் கொடுக்கும். இந்தவாரம் உங்களுக்கு மிக மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி : 19
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)



கன்னி
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தான் செய்யும் எந்த காரியத்திலும் வாய்மையும் முன்னுரிமையும் பெற எண்ணும் கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நல்ல நண்பர்களின் அறிமுகத்தால் வாழ்வில் உயர்வு காண்பீர்கள். பணவரவுகள் நன்றாகவே இருக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். குடும்பத்தில் அமைதியான போக்குகள் காணப்படும். பணத் தட்டுப்பாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உடல் நிலையில் ஆரோக்கியம் காணப்படும். உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். அரசியல் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். பெண்களுக்கு அன்பான சூழ்நிலைகள் உருவாகும். இந்தவாரம் உங்களுக்கு மிக மகிழ்ச்சியாகவே செல்லும். 

அதிர்ஷ்ட திகதி : 21
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி



துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.

தேடிச் சென்று உதவிடும் குணமும் முடிவுகளை பாராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உடல் சோர்வு, மனதளவில் சிறிது அலைச்சல் காணப்படும். பயணங்கள் அலைச்சல் உடையதாகவே அமையும். செலவுகள் கூடுதலாக இருக்கும், சிக்கனம் தேவை. அனாவசிய பேச்சுக்களை தவிர்ப்பதால் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். ஆனால், வார இறுதியில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கப்பெறும். காரியங்கள் வெற்றியடையும். எதிர்பார்த்த சுப செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்து வந்த சிறு சிறு சலசலப்புக்கள் நீங்கும், மகிழ்ச்சி உண்டாகும். வார இறுதி உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.  

அதிர்ஷ்ட திகதி : 18
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி



விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடையவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் பணவரவுகள் அதிகம் காணப்படும். புதிய முயற்சிகள் வெற்றியைத்தரும். பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள நல்ல வாய்ப்புக்கள் வந்து சேரும். வியாபாரிகளின் லாபம் சுமாராக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தாய் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வார இறுதியில் வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக இடமுண்டு. தொழிலில் வாடிக்கையாளரின் அதிருப்திக்கு ஆளாக இடமுண்டு. எனவே கவனம் அவசியம்.

அதிர்ஷ்ட திகதி : 17
அதிர்ஷ்ட நிறம் : கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மர்



தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் பிறரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். அரசாங்கத்தினரால் ஆதாயம் காணப்படும். வரலாற்று சிறப்பு மிக்க பொருட்களை காண்பீர்கள். இடம் மாற்றம் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். குடும்பத்து பெரியவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். உற்சாகம் காணப்படும். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காணப்படும். வாகன யோகங்கள் உண்டாகும். வார இறுதியில் கவனம் அவசியம். உடலில் உஷ்ணம் ஏற்பட்டு சிறிது பாதிப்புக்கள் உண்டாகும். பிறரிடம் உதவியை நாடுதல், வீண் மனஸ்தாபங்கள் காணப்படும்.

அதிர்ஷ்ட திகதி : 20
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)



மகரம்
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் அனுபவசாலிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றி வெற்றி கொள்வீர்கள். பெண்களுக்கு தாய் வழியில் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். மாற்றுத் தொழிலில் கவனம் செலுத்தி லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தடைப்பட்ட காரியங்கள் நடைபெறும். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிரமம் இருக்காது. வீடு வாங்கும் எண்ணம் கொண்டவர்கள் அதற்குரிய பேச்சுவார்த்தைகளில் விலை உயர்ந்த பொருட்களை பரிசாக பெறுவீர்கள். இந்தவாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே கொடுக்கும்.

அதிர்ஷ்ட திகதி : 20
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)



கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரம் இன்றி வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. வீணான மன பயங்கள் உண்டாகும். வயிற்றில் உபாதைகள் தோன்றி மறையும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. வேலையில் சில தவறுகள் உண்டாகும். மனதளவில் துக்கம் காணப்படும். எந்த ஒரு விடயத்தையும் மனம் இன்றியே செய்து முடிப்பீர்கள். வார இறுதியில் பெண்களுக்கு தலைமை பொறுப்புக்கள் கூடி வரும். நவீன உக்திகளால் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வார இறுதி மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி : 6, 15, 24, 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்

சந்திராஷ்டமம்:
மார்ச் 16ஆம் திகதி மாலை 06.35 மணியிலிருந்து மார்ச் 18ஆம் திகதி காலை 03.28 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.




மீனம்
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

தனகென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொழிலில் அதிக அளவில் ஆர்வம் காணப்படும். இவ்வளவு நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும். அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கடின உழைப்பால் விற்பனை அதிகரித்து லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும். அதிக பணலாபம் உண்டாகும். மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வரவிற்கேற்ற செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறலாம். மனம் அமைதியை விரும்பும் நீங்கள் மிகவும் நேசித்த பொருள் உங்களை தேடி வரும். வாரம் முழுவதும் மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி : 21
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம் : குருபகவான்

சந்திராஷ்டமம்:
மார்ச் 18ஆம் திகதி காலை 03.28 மணியிலிருந்து மார்ச் 21ஆம் திகதி காலை 10.18 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X