2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

இந்தவார பலன்கள் (19.05.2013 - 25.05.2013)

A.P.Mathan   / 2013 மே 18 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இந்தவார பலன்கள் (19.05.2013 - 25.05.2013)
 
மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
தன்னை சார்ந்தவர்களுடன் ஒளிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பா்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு வியாபாரத்தில் பல புதிய வழிகள் உருவாகும். இதனால் லாபம் ஏற்படும். மற்றும் அழகிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வெளியில் இருந்து இன்பமான செய்திகள் வந்து சேரும். மற்றும் வார இறுதியில் உடல் நிலை மோசமடையும். மனதில் குழப்பமான சூழ்நிலை உருவாகும். துக்கமான நிகழ்வுகள் உண்டாகும். வீண் சிரமங்கள் ஏற்படும். மேலும் பணத்திற்கு  பிரச்சினைகள் உண்டாகும். வெளியூர் பிரயாணம் செல்லும் சூழ்நிலை உருவாகலாம்.
 
அதிர்ஷ்ட திகதி : 19
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன், சூரியன்
 
சந்திராஷ்டமம்
மே 24ஆம் திகதி மாலை 05.35 மணியிலிருந்து மே 26ஆம் திகதி மாலை 05.19 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
 
 
இடபம்
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக்கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு உறவினர்களிடையே அன்யோன்யம் கூடுதலாக காணப்படும். காரியங்களில் வெற்றிகள் கிடைக்கப்பெறுவீர்கள். வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். இசையில் ஆர்வம் காணப்படும். புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். வார இறுதியில் உடல் நிலை மோசமடைந்து காணப்படும். மனதில் குழப்பமான சூழ்நிலைகள் உருவாகும். இதனால் பயம் தோன்றும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். காரியங்கள் அனைத்தும் தடைப்படும். பிறருடைய உதவியை எதிர்பார்க்கும் சூழ்நிலைகள்  உருவாகலாம்.
 
அதிர்ஷ்ட திகதி : 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உடலில் உஷ்ணம், காய்ச்சல், தலைவலி போன்றவை ஏற்படும். வீண் செலவுகள் அதிகரிக்கும் நிலை உருவாகலாம். சாப்பாட்டில் வெறுப்பு காணப்படும். மனதளவில் கஷ்டம் ஏற்படும். வார இறுதியில் மன ஆறுதல்கள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலைகள் நிலவும். இதனால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும். தனலாபம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்படும். அயல் தேசங்களிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். உடல் நலத்தில் குறைபாடு காணப்படும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியம்.
 
அதிர்ஷ்ட திகதி : 22
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
கடகம்
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
 
மென்மையான சுபாவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் தாழ்ந்த உள்ளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு வேண்டாத பேச்சுக்களால் பிரச்சினைகள் உருவாகும். முயற்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் தோல்வியில் போய் முடியும். பணத்தினால் பிரச்சினை உண்டாகும். தலைவலி ஏற்படும். மனதில் பயம் காணப்படும். வீட்டைவிட்டு வெளியில் அலையும் சூழ்நிலை உருவாகும். வார இறுதியில் பெண்களினால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும்.  பணம் ஈட்டுவதில் ஈடுபாடு காணப்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்பட்டு வியாபாரம் விருத்தியடையும். வார இறுதி மகிழ்ச்சியாகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 21
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
 
 
 
சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட  சிம்ம ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு மகான்களுடைய தரிசனங்கள் கிடைக்கப்பெறும். பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். அதிகாரிகளிடையே காரிய சாதனைகள் கிடைக்கப்பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களுடைய வருகை ஏற்படும். இதனால் மகிழ்ச்சி நிலவும். வார இறுதியில் பெண்களுடன் விவாதங்களில் ஈடுபட நேரிடும். மற்றவர்களினால் பிரச்சினை உண்டாகும்.   துன்பங்கள் நிகழ நேரிடும். மனம் சஞ்சலம் அடையும். வேண்டாத செலவுகளால் வேதனையடைய நேரிடும் மேலும் எந்த ஒரு காரியத்திற்கும் முன் நிற்பதைத் தவிர்க்கவும். இதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
 
அதிர்ஷ்ட திகதி : 23
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
கன்னி
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
நீதி தவறாமை, கண்ணியம், நேர்மை, கனிவான உள்ளம், சுபாவத்தில் கலகலப்பான கன்னி ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் நீங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மகிழ்ச்சியான செய்திகள் வரும். தனலாபம் காணப்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் உண்டாகும். காரியங்கள் வெற்றியடைதல், அயல்நாட்டில் இருந்து செய்தி வருதல். தீயவர்களின் நட்புக்களைத் தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் தொழிலில் ஏற்படும் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைக்கும். இதனால் உற்சாகமான சூழ்நிலை உருவாகும். பலவகையில் சிக்கல்கள் ஏற்படும். மனதளவில் கஷ்டம் தோன்றும். ஆனாலும் இந்தவாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும்.
 
அதிஷ்ட திகதி : 20
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
 
துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள். 
 
தேடிச் சென்று உதவிடும் குணமும் முடிவுகளை பாராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு உடல் நிலையில் பாதிப்புகள் காணப்படும். பணப் பிரச்சினை ஏற்படும். தலைவலி, காய்ச்சல் மற்றும் பயம் போன்றவை உண்டாகும். தீயவர்களுடைய நட்பினால் நஷ்டங்கள்,  சிக்கல்கள் காணப்படும். பொழுதுபோக்குகளில் கவனம் தேவை. சுற்றத்தினர், நண்பர் வருகை காணப்படும். ஆடை, ஆபரணங்கள் சேகரித்தல், நண்பர்களுடன் வெளியில் செல்லும் நிலை உருவாகும். மேலும் நல்லவர்களின் சேர்க்கைகள் கிடைக்கும். பெண்களுடன் விவாதங்கள் ஏற்படும். பிரயாணம் செல்லும் நிலை உருவாகலாம். இதனால் லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
 
அதிர்ஷ்ட திகதி : 20
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
 
விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
 
ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடையவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல்பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு துக்கமான நிகழ்வுகள் ஏற்படும். மேலும், செய்யும் செயல்களில் தவறுகள் உண்டாகும். மனதில் சில சஞ்சலங்கள் காணப்படும். பிறர் உதவி எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும்.  மேல் அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் வீண் பிரச்சினைகள் தோன்றி மறையும். பெரியோர்களின் சந்திப்பு ஏற்படும். தீயவர்களின் நட்பினால் தொழில் நஷ்டமடையும். புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். பிரயாணம் செல்லும் நிலை ஏற்படலாம். இதனால் லாபம் அதிகரிக்கும். சுற்றத்தினர், நண்பர் வருகை. இதனால் பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் செலவு இடுதல், அழகிய ஆடை, ஆபரணங்கள் சேருதல் ஆகியவை நிகழும். சுமாரான வாரம் இது.
 
அதிர்ஷ்ட திகதி : 23
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். புதிய தொடர்புகள் ஏற்படும். இதனால்  வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை நிலவும். சாதுக்களின் தரிசனம் கிடைக்கும். இதனால் மனம் அமைதி அடையும். வீணான அலைச்சல்கள் காணப்படும். வார இறுதியில் செய்யும் செயல்களில் தவறுகள் உண்டாகும். முயற்சிகள் தோல்வியடையும். பிறருடைய உதவியை நாடும் நிலை உருவாகலாம். உடலில் உஷ்ணம் காணப்படும். பெரியோர்களின் சந்திப்புகள் நிகழும். இதனால் மனதில் மகிழ்ச்சி நிலவும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். மகிழ்ச்சியான வாரம் இது.
 
அதிர்ஷ்ட திகதி : 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
மகரம்
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும். காரியங்கள் அனைத்தும் தடைப்படும்.  வியாபாரத்தில் புதிய பிரச்சினைகள் ஏற்படும். மேலும் புதிய முயற்சிகள் செய்தல், நீண்ட தூரம் பயணம் செல்லுதல், இதனால் லாபம் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையினால் சந்தோஷம் அதிகரிக்கம். பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் செலவிடும் சூழ்நிலை உருவாகலாம். இதனால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நல்ல நண்பர்களின் சேர்க்கைகள் கிடைக்கும். சுகமான உணவுகளால் மனம் மகிழ்ச்சியடையும். மனதளவில் அலைச்சல் உண்டாகும். பெண்களுடன் விவாதங்கள் தோன்றும்.  மற்றவர்களினுடைய பிரச்சினைகளால் துன்பமடைய நேரிடும். மனம் சஞ்சலம் அடைதல், வேண்டாத செலவுகள் ஆகியவை காணப்படும்.
 
அதிர்ஷ்ட திகதி : 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரம் இன்றி வாழ விரும்பும் வாக்குவான்மை கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு தொழிலில் சிலவகையான பிரச்சினைகள் ஏற்படும். அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் வீண் பிரச்சினை ஏற்படும். சில இடங்களில் பேச்சுகளால் மனஸ்தாபம் உண்டாகும். இதனால் மனதில் பயம் உண்டாகும். வீண் அலைச்சல் காணப்படும். இடம்விட்டு வேறு இடம் மாறுதல் உண்டாகும். வார இறுதியில் சுவையான உணவு உண்ணுதல், பெண்களினால் மகிழ்ச்சிகள் காணப்படும். வியாபாரத்தில் புதிய வழி கிடைக்கும். இதனால் லாபம் கிடைக்கும். மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முயற்சி செய்தால் அனைத்திலும் வெற்றியடையலாம்.
 
அதிர்ஷ்ட திகதி : 19
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)
 
சந்திராஷ்டமம்
மே 20ஆம் திகதி காலை 11.40 மணியிலிருந்து மே 22ஆம் திகதி மாலை 04.12 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
 
 
மீனம்
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.
 
தனகென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு சிலவகைகளில் சிரமங்கள் உண்டாகும். மனம் சஞ்சலமடையும். வீண் மனஸ்தாபம் உண்டாகும். உஷ்ணம், காய்ச்சல், தலைவலி ஏற்படும். முயற்சிகளில் தோல்வி காணப்படும். வார இறுதியில் மன மகிழ்ச்சியடையும். சில முயற்சியில் வெற்றிகள் கிடைக்கும். அதிக பண லாபம் உண்டாகும். ஆனாலும் சில இடங்களில் காரியம் தடைப்படுதல் காணப்படும். வியாபாரத்தில் பல புதிய வழி கிடைக்கும். இதனால் லாபம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவை உண்டாகும். நல்லவர்கள் சேர்க்கைகள் கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் வருகையினால் மகிழ்ச்சி ஏற்படும்.  நிம்மதியான தூக்கம் நிறைவாக கிடைக்கும். மகிழ்ச்சியான வாரம் இது.
 
அதிர்ஷ்ட திகதி : 25
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா
 
சந்திராஷ்டமம்
மே 22ஆம் திகதி மாலை 04.12 மணியிலிருந்து மே 24ஆம் திகதி மாலை 05.35 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X