Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மே 10 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தவார பலன்கள் (10.05.2015 - 16.05.2015)
மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
கடந்த காலத்தை மறக்காத மேட ராசி அன்பர்களே..!
இந்தவாரம் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பணம் தந்து முடிக்காமல் இருந்த காரியத்தை மீதிப்பணம் தந்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர் மற்றும் நண்பர்களுடன் விரிசல் வரக்கூடும். யாரையும் விமர்சித்து பேசவேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி புதிய திட்டங்களை தீட்டி செயல்படுவீர்கள். வாரப் பிற்பகுதியில் மகிழ்ச்சி கூடும் வாரமிது.
அதிர்ஷ்ட திகதி : 12
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
இடபம்
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
செய்நன்றி மறவாத இடப ராசி அன்பர்களே..!
இந்தவாரம் உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிக் கொள்வீர்கள். வீட்டுத்தேவையை நிறைவேற்ற தாராள பணவசதி இருக்கும். புத்திரரின் எதிர்கால வாழ்வு சிறக்க சில திட்டம் உருவாக்குவீர்கள். பழகுபவர்களிடம் கூடுதல் மதிப்பு மரியாதை பெறுகிற வகையில் செயல்படுவீர்கள். உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும் இல்லறத்துணை விரும்பி பொருளை வாங்கித் தருவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை செழித்து வளர புதியவர்களின் வருகை துணை நிற்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். மாணவர்கள் ஞாபகத்திறனை வளர்த்து படிப்பில் வியத்தகு தேர்ச்சி விகிதம் பெறுவர்.
அதிர்ஷ்ட திகதி : 12
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்
மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
வருங்காலத்தைப் பற்றி அதிகம் யோசிக்கும் மிதுன ராசி அன்பர்களே..!
இந்த வாரம் மன பலம் கூடும். எதையும் தன்னிச்சையாக செயல்படத் துவங்குவீர்கள். தடைபட்ட காரியங்கள் விரைந்து முடியும். உடன் பிறந்தவர் ஓரளவு உதவுவர். வாகனத்தில் பராமரிப்பு பயணமுறையை எளிதாக்கும். பேசும் வார்த்தை வசீகரம் மற்றும் இனியதாக அமையும். அவமானப்படுத்த முயற்ச்சிப்பவர்களிடம் சமயோசிதமாக விலகுவீர்கள். பணக்கடன் மனதில் சஞ்சலத்தை உருவாக்கும். இல்லறத்துணை உங்களுக்கு நல்ல ஆலோசனை வழங்குவார். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இயங்கும். பணியாளர்கள் கூடுதல் வேலைவாய்ப்பை விரும்பி ஏற்றுக் கொள்வர்.
அதிர்ஷ்ட திகதி : 13
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
கடகம்
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
சமயோதிச புத்தி அதிகம் உள்ள கடக ராசி அன்பர்களே..!
இந்தவாரம் எதிர்பார்த்த வகையில் பணம் வந்து சேரும். சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புத்திரரின் சேர்க்கை சகவாசம் கண்காணித்து நல்வழி நடத்துவது அவசியம். வழக்கு விவகாரத்தில் சமரசத் தீர்வு கிடைக்க சிலர் உதவுவர். இல்லறத்துணை குடும்ப ஒற்றுமை சிறக்க பாடுபடுவார். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் கூடுதல் உழைப்பு என்கின்ற நடைமுறை சிரமம் தவிர்க்க உதவும். முக்கியமான சில செயல்கள் நிறைவேற கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். சமூகத்தில் பெற்ற மதிப்பு மரியாதையை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பீர்கள்.
அதிர்ஷ்ட திகதி : 10
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
யாருக்காகவும் கொள்கையை மாற்றிக்கொள்ளாத சிம்ம ராசி அன்பர்களே..!
இந்தவாரம் உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வீண் பயம் விலகும். புதிய பொறுப்புக்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களின் கஷ்டம் தீர உதவுவர். வாகன பயணம் இனிதாக அமையும். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும். கடன் பிணி தொந்தரவு குறையும். இல்லறத்துணை ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில் வியாபார நடைமுறையில் சில மாற்றம் செய்வீர்கள். உற்பத்தி விற்பனை சீராகும். மாணவர்கள் புதிய பயிற்சியினால் பாடங்களை மனதில் எளிதாக பதிய வைப்பர். குடும்ப பெண்கள் கணவர் வழி உறவினர்களிடம் நல்அன்பு பாராட்டி நற்பெயர் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திகதி : 14
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)
கன்னி
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
கலகலப்பாக பேசி சாதிக்கும் கன்னி ராசி அன்பர்களே..!
இந்தவாரம் உடல் நல ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். அரசு தொடர்பான உதவி பெற அனுகூலம் வளரும். பழகுபவர்களிடம் எதிர்மறை கருத்து பேசுவதால் அவப்பெயர் வரலாம். கவனம் தேவை. புத்திரர் ஆர்வம் மிகுதியால் செயல்களில் குளறுபடி எதிர்கொள்வாதொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும் உபரி பணவரவும் பெறுவீர்கள். பணியாளர் திறம்பட பணிபுரிந்து பாராட்டு வெகுமதி பெறுவர். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். இல்லறத்துணை அறிவுத்திறனில் மேம்பட்டு நல்ல ஆலோசகராக விளங்குவர்.
அதிர்ஷ்ட திகதி : 10
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா
துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.
பாகு பாடு பார்க்காமல் பழகும் துலா ராசி அன்பர்களே..!
இந்தவாரம் மரியாதை குறைவான சம்வங்கள் நிகழும். புதிய முயற்;ச்சி எதிர்பாராத அளவில் வெற்றி தரும். பேசும் வார்த்தையில் நிதானம் நிறைந்திருக்கும். ஆன்மீக அருள் பெற்றவர்களின் ஆசி கிடைக்கும். எதிரிகளின் செயல்கள் பலம் இழக்கும். இ;ல்லறத்துணையின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. பணியாளர்களுக்கு சிறு அளவில் சலுகை கிடைக்கும். பெண்கள் கணவர் பற்றி பிறர் சொல்லும் கருத்தின் உண்மையை உணர்வது நல்லது. மாணவர்கள் படிப்பில் புதிய அணுகுமுறையுடன் ஈடுபடுவர். தொழில் வியாபாரம் செழித்து பணவரவு திருப்திகரமாகும்.
அதிர்ஷ்ட திகதி : 16
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)
விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
நினைத்ததை மறைக்காமல் பேசும் விருச்சிக ராசி அன்பர்களே..!
இந்தவாரம் எதிரிகள் நண்பர்களாவார்கள். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய திட்டம் செயல்படுத்தி நன்மையும் பணவரவும் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் மனக்குறையை மாற்றும் அளவில் ஆறுதலாக பேசுவீர்கள். வீடு வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு பின்பற்றவும் .உடல் நல ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை உதவும். தொழிலில் உபரி பணவரவு கிடைத்து சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்கள் கூடுதல் வேலைவாய்ப்பு திருப்திகர பணவரவு பெறுவர். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவது தவிர்ப்பதால் படிப்பில் கவனம் வளரும். பெண்கள் உறவினர் குடும்பத்தில ஒற்றுமை வளர ஆலோசனை சொல்வீர்கள்.
அதிர்ஷ்ட திகதி : 13
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
நெருக்கடி நேரத்திலும் தன்னிலை தவறாத தனுசு ராசி அன்பர்களே..!
இந்தவாரம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பேச்சாற்றல் செயல் திறனில் முன்னேற்றம் காண்பீர்கள். உடன் பிறந்தவர்களின் உதவி முழு அளவில் கிடைக்கும். வாகனத்தில் பாராமரிப்பு பணி மேற்கொள்வதால் பயணம் எளிதாகும். புத்திரர் மனதில் இருந்த கஷ்டம் விலகி புத்துணர்வுடன் செயல்படுவர். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்க புதிய வியூகம் உருவாக்குவீர்கள். ;. எதிரி சொந்த சிரமங்களால் விலகுவார். பெண்கள் கணவரின் அன்பு தாராள பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பு நன்னடத்தையில் முன்னேற்றம் காண்பர்.
அதிர்ஷ்ட திகதி : 10
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்
மகரம்
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
தன்மானம் தவறாத மகர ராசி அன்பர்களே..!
இந்தவாரம் நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். மனதில் மகிழ்ச்சி தெய்வ நம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். ஆர்வம் மிகுந்த வார்த்தை தவறுதலாக அமைந்து பிறர் மனம் வருந்த நேரலாம். கவனம் தேவை. அறிமுகம் இல்லாதவர்க்கு வீடு வாகனத்தில் இடம் தர வேண்டாம். இல்லறத்துணையுடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில் வியாபாராத்தில் சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். பணியாள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள் கணவர் வழி சார்ந்த உறவினர்களிடம் கருத்து வேறுபாடு வராமல் தவிர்க்கவும். மாணவர்கள் சாகச விளையாட்டில் ஈடுபடக்கூடாது.
அதிர்ஷ்ட திகதி : 16
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்
கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
பிறரை மகிழ்வித்து தானும் மகிழும் கும்ப ராசி அன்பர்களே..!
இந்தவாரம் திட்டமிட்ட காரியங்கள் முடியும். புதிய வேலைகள் அமையும். உடல் நல ஆரோக்கியம் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் கொள்வீர்கள். தாமதமாகிய பணி புதிய முயற்ச்சியால் நிறைவேறும். ஆன்மீக கருத்துக்களை மறுத்து பேசுபவர்களிடம் விலகி இருப்பது நல்லது. பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். குடும்ப பெண்கள் செயல்களில் குளறுபடி எதிர்கொள்ளுவர். கவனம் தேவை. வீடு வாகனத்தில் பராமரிப்பு மேற்கொள்வதால் பயன்பாட்டு வசதி சீராக கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மாற்று திட்டத்தை செயல்படுத்தி நன்மை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திகதி : 15
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா
மீனம்
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.
தொட்ட காரியத்தை ஓய்வு எடுக்காமல் முடிக்கும் மீன ராசி அன்பர்களே..!
இந்தவாரம் மனதில் பூர்வீக சொத்து பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். ஏளனமாக பார்த்த உறவினர்களுக்கு பதிலடி கொடுப்பீர்கள். புத்துணர்வு செயல்களில் சமயோசித குணம் நிறைந்திருக்கும். பயனற்ற விவாதத்தை தவிர்ப்பது நல்லது. சகோதரியின் கூடுதல் அன்பு பாசம் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சுமூகநிலை ஏற்படும். பணியாளர்கள் ஆர்வமுடன் பணி இலக்கை நிறைவேற்றுவர். மாணவர்கள் படிப்பில் உருவான சந்தேகம் நீங்கி கூடுதல் தேர்ச்சி விகிதம் பெறுவர். குடும்ப பெண்கள் பிரார்த்தனை நிறைவேற்றி இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடத்துவர்.
அதிர்ஷ்ட திகதி : 14 அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
14 minute ago
30 minute ago
40 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
30 minute ago
40 minute ago
53 minute ago