2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

கவிச்சமரில் வெற்றி

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற கவிச்சமர் போட்டியில், முதல் ஏழு இடங்களைப் பெற்றுக்கொண்ட கலைஞர்கள் இந்தியாவுக்குச் செல்லத் தகுதி பெற்றுள்ளனர்.   

இவர்களில் மலையகத்தைச் சேர்ந்த உதயா என்ற இளைஞரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.  
இப்போட்டியில் 40 பேர் பங்குபற்றியிருந்த நிலையில், அவர்களில் முதல் ஏழு இடங்களைப் பெற்றுக்கொண்டவர்களே இந்தியாவுக்குச் செல்லவுள்ளனர்.   

நாவலப்பிட்டி பார்கேபல் தோட்டத்தைச் சேர்ந்த உதயா (உச்சிமலை உதயா), இலங்கையில் தயாராகிவரும் தமிழ்த் திரைப்படம் ஒன்றில் மூன்று பாடல்களை எழுதுவதற்கான சந்தர்ப்பத்தையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .