2022 ஜனவரி 22, சனிக்கிழமை

இறுவட்டு வெளியீடு

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், மன்னார் மாவட்ட சுற்றுலா தளங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட பாடல் மற்றும் மன்னார் மாவட்டத்தின் கைத்தொழில் உற்பத்திகளை மையப்படுத்திய ஆவணப்படம் என்பவற்றை மாவட்ட ரீதியில் வெளியீடு செய்யும் நிகழ்வு, மன்னார் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று (18) மாலை மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்றது. 

'MIC turisam' எனும் எண்ணக்கருவில் மன்னார் மாவட்டதில் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் சுற்றுலா சார்ந்த இடங்களை அடையாளபடுத்தும் முகமாகவும் சுற்றுலா பயணிகளின் வரவினை அதிகரிக்கும் முகமாகவும் கனடா நாட்டின் நிதி உதவியுடன் குறிப்பிட்ட பாடல் மற்றும் ஆவணப்படம் தயாரிக்கபட்டுள்ளது.

இவை இறுவட்டாக வெளியீடு செய்துவைக்கப்பட்டது.

இதன்போது, சுற்றுலா  படகு ஓட்டுநர்களுக்கான பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்வில், மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X