2021 செப்டெம்பர் 25, சனிக்கிழமை

'உருகிட வா' இசை வெளியீட்டு விழா

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


'உருகிட வா' பாடல்  இசை வெளியீட்டு விழா மன்னார் நகரசபை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையத்தின் இயக்குநர் தமிழ்நேசன் அடிகளாரின் தலைமையில் மன்னார் பா.சிந்துஜா
இயற்றிய 'உருகிட வா' இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இசை இறுவெட்டை வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்  வெளியிட்டு வைத்தார். முதல் பிரதியை தமிழ்நேசன் அடிகளார் அமைச்சருக்கு வழங்கி வைத்தார்.

இதனைத்  தொடர்ந்து இறுவெட்டுக்கள் அதிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.  மேலும்,  சிந்துஜாவினால் இறுவெட்டுகள் சிறப்பு பிரமுகர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர்  பா.டெனிஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, குறித்த இசை வெளியீட்டு விழா சமீபத்தில் யாழ்ப்பாணத்திலும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .