Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Princiya Dixci / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
நாடு அபிவிருத்தி அடைய வேண்டுமானால் மத ஐக்கியம் மற்றும் புரிந்துணர்வு காணப்பட வேண்டும். அப்போதுதான் ஒரு நிறைவான அபிவிருத்தியை நாம் அடைய முடியுமென அட்டாளைச்சேனை மத்தியஸ்த சபை தவிசாளர் ஐ.எல்.எம். ஹாஸிம் தெரிவித்தார்.
இலங்கையில் மத ஐக்கியத்தை ஊக்குவிக்கும் பொருட்டு இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் அனுசரனையுடன் சர்வ மத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அறநெறி பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு 'சமூக ஐக்கியத்தை ஊக்குவித்தல்' எனும் தொனிப்பொருளில் நேற்று வெள்ளிக்கிழமை (19) மாலை அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நடைபெற்ற சர்வ மத ஒன்று கூடலில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அம்பாறை மாவட்ட சர்வ மத ஒன்றியத்தின் இணைப்பாளர் ஏ.எல். கிதுரு முகம்மது தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் மத்தியஸ்த சபை தவிசாளர் ஐ.எல்.எம். ஹாஸிம் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டில் இனவாதம் ஒழிக்கப்பட்டு சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் மதங்களிடையிலான சக வாழ்வை மனித உரிமைகள் அடிப்படையிலான அனுகு முறையொன்றின் ஊடாக வளர்த்தல் வேண்டும்.
இன உறவினூடாக சமூகங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி அதனூடாக சமாதாணத்தை ஏற்படுத்துவது நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜையின் கடமையாகும்.
கடந்த காலங்களில் நாம் பல இன்னல்களை சுமந்தவர்களாக வாழ்ந்து வந்துள்ளோம். அதனால் நாம் ஒவ்வொரு இனத்தவரும் ஒவ்வொருவரையும் வேற்று மனப்பான்மையுடன் வாழ்ந்த வரலாறுகள் உண்டு.
தற்போது இன விரிசல் இல்லாமல் ஒழிக்கப்பட்டு சகோதரர்களாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகின்றோம். இவை என்றும் நிலைக்க வேண்டும்.
நாம் நிம்மதியாக வாழ்ந்தால்தான் எதிர்கால சமூகம் நிம்மதியாகவும், சுமுகமாகவும் வாழும். அதற்கான வழி வகைகளை இவ்வாறான செயலமர்வுகள் மூலம் பின்பற்றி நடக்க வேண்டுமென்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .