Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Kogilavani / 2016 ஏப்ரல் 22 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருண குமார, ஆர்.கோகுலன்
இருவேறு பகுதிகளில் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தந்தை உள்ளிட்ட இருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
ரத்தோட்டை, மடவல பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 22 வயது இளைஞனைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையி;ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விளைஞனைக் கைதுசெய்வதற்காக விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.
இதேவேளை, வெலிமடை, கலுபுலுலந்த மாதோவிட பகுதியில், தனது 14 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 36 வயதுடைய தந்தையை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
கெப்பெடிபொல பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி பயின்று வரும் மேற்படி மாணவி, வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது மதுபோதையில் இருந்த தந்தையால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேற்படி மாணவியின் தாய், கடந்த இரண்டு வருடங்களாக கொழும்பில் வேலை செய்து வருவதாகவும் இவர்களுக்கு 4 பிள்ளைகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த மாணவி தற்போது வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் வெலிமடை
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .