2025 மே 07, புதன்கிழமை

மரக்கிளை முறிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் சேதம்

Gavitha   / 2016 ஜூன் 18 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெனில்வத்தை தோட்டம் பிளக்வோட்டர் பிரிவிலுள்ள பாரிய மரமொன்று சரிந்து விழுந்ததில், இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளது.

இன்று சனிக்கிழமை (18) இடம்பெற்ற இந்த சம்பவம் காரணமாக, குறித்த வீட்டிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார், குறித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகமும் பிரதேச மக்களும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X