Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
George / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
கடந்த காலத்தில் இலங்கை இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதல்கள் மற்றும் ஏனைய யுத்த காரணங்களால் தங்களுடைய தங்களுடைய கால்களை இழந்த முன்னாள் போராளிகள் மற்றும் பொது மக்கள் சிலருக்கு இராணுவத்தினரால் செயற்கை கால்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழவு இன்று வெள்ளிக்கிழமை, கிளிநொச்சியில் உள்ள ஒத்துழைப்பு மையத்தில் இடம்பெற்றது.
அமெரிக்காவின் யுஎஸ்எய்ட் உதவியுடன் கண்டி குண்டகசாலை மாற்று வலுவுள்ளோர் நிலையத்தின் அணுசரனையில் கிளிநொச்சி இராணுவத்தினரால் 28 பேருக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினருடன் நேரடி யுத்தத்தம், மிதிவெடி போன்ற காரணங்களினால் தங்களுடைய கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கும் மற்றும் ஒரு சில பொது மக்களுக்கும் இவ்வாறு செயற்கை கால்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் கட்டளைத்தளபதி, பிரதம அதிதியாக கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான செயற்கை கால்களை வழங்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .