2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

நவீனமயப்படுத்தப்பட்ட அருங்காட்சியகம் திறப்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 13 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வங்கி தேசத்திற்கு ஆற்றி வரும் அதன் சேவையின் 77 வருட பூர்த்தியை அண்மையில் பெருமையுடன் கொண்டாடியது. அதன் 77 ஆவது வருட நிறைவுக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக, கொழும்பு இலங்கை வங்கி சதுக்கத்திலுள்ள (முன்னர் “Echelon Square”என அழைக்கப்பட்டது) அதன் தலைமை அலுவலகத்தில் புதிய அருங்காட்சியகத்தைத் திறந்திருந்தது.

1939ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கை வங்கி நாட்டின் பொருளாதார வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியிருந்தது. இதற்கு முன்னர் நாட்டினுள் நிறுவப்பட்ட வங்கிகள் நவீன வங்கிச் சேவைகளை இலங்கை மக்களுக்கு வழங்கியிருக்கவில்லை. மிகவும் வசதியானதும், கீர்த்தியையும் கொண்ட ஒரு சிலரே அத்தகைய வெளிநாட்டு வங்கிகளை பயன்படுத்தியிருந்தனர். சிலோனின் நிதிச் சேவைகளை அப்போதைய காலத்தில் நாட்டுக்கோட்டை செட்டியார்களே பூர்த்தி செய்துள்ளனர்.

இந்த நிலைமையை மாற்றும் வகையில் இலங்கை மக்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 1939ஆம் ஆண்டில் இலங்கை வங்கி ஸ்தாபிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரையான இலங்கை வங்கியின் வளர்ச்சி மற்றும் அதன் கதை இந்த அருங்காட்சியகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கை வங்கி பணம் மற்றும் வங்கியியல் அருங்காட்சியகம்

இந்த வங்கியின் புதிய அருங்காட்சியகம் தலைமைக் காரியாலயத்தின் 28ஆவது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை வங்கி தலைமைக் காரியாலயத்தின் வட்ட வடிவ அமைப்பினைப் பயன்படுத்திய கட்டிடக்கலை கலைஞர்கள் தனிச்சிறப்புமிக்க வளைவான கலரியாக அருங்காட்சியகத்தை வடிவமைத்துள்ளனர். கட்டிடத்தைச் சுற்றிலும் சென்று பார்வையிடக்கூடிய வகையில் வட்ட வடிவில் கலரியொன்று இருப்பதால் பார்வையாளர்கள் கலரியைச் சுற்றிலும் நடந்து சென்று கொழும்பு நகரின் அழகை நன்கு பார்க்கக்கூடியதாகக் காணப்படுகிறது. அருங்காட்சியகத்தின் குறிக்கோள்கள் தொடர்பில் அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் விளக்கமளிக்கப்பட்டுள்ளன.  

'இந்த பணம் மற்றும் வங்கியியல் அருங்காட்சியகமானது இலங்கையின் பணம் மற்றும் இரண்டு நூற்றாண்டுகளுக்கான வர்த்தகம் மற்றும் நவீன வங்கியியல் சகாப்தத்தில் அதன் மாற்றம் என்பன தொடர்பில் மக்களை மேம்படுத்தும் வகையிலும், விழிப்பூட்டும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது'.

'இலங்கையின் ஆரம்ப கால பண்டமாற்று முறைகள், வர்த்தக உறவுகளின் நீண்ட கால வரலாறு மற்றும் உள்நாட்டு காசு முறை வெளிப்பாடு, நாட்டின் நவீன வங்கியின் உள்நுழைவு மற்றும் 21ஆம்                         நூற்றாண்டு வர்த்தகம் மற்றும் வங்கியியல் நடைமுறைகளின் பங்கு போன்றன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன'.
இந்த அருங்காட்சியகத்தில் 'பண கலரி' எனும் நாணயங்கள் மற்றும் காசுப் பிரிவும், இலங்கை வங்கியின் வரலாற்றைக் குறிக்கும்‘BOC fyup' மற்றும் நவீன வங்கியியல் பிரிவாக 'வங்கியியல் நிலையம்' என மூன்று பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாணயங்கள் மற்றும் காசுப் பிரிவு

இந்தப் பிரிவில் பொருள் பரிமாற்றம் என்பது எவ்வாறு தற்போதைய பணப் பயன்பாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டது என்பது தொடர்பிலும், எவ்வாறு கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற வௌ;வேறு நாணய முறைகள் விருத்தியடைந்தன என்பன தொடர்பிலும் காட்டப்பட்டுள்ளன. மேலும் இதில் வௌ;வேறு விதமான நாணயக் குற்றிகள் மற்றும் பணங்களின் சேகரிப்புகளும் காணப்படுகின்றன.

இலங்கையின் வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பழைமை வாய்ந்தது. இலங்கையின் முன்னோர்கள் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்னரே பண்டங்களைப் பரிமாறிக் கொண்டதற்கான சான்று காணப்படுகின்றன. நாட்டின் உள்ளகப் பகுதிகளிலுள்ள குகை வாசிகள் கடலோரப் பகுதிகளிலுள்ள வேட்டையாடுபவர்களுடன் தங்களது பொருட்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். அகழ்வுகளின் போது சுறாவின் பற்கள் ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளன.  

1500 BCE இலிருந்து 600 BCE வரையான 'புரோட்டோ வரலாற்று காலத்தினுள்' இந்தப் பொருள் பண்டமாற்று முறைமையானது அடிப்படை நிறை மற்றும் அளவீட்டு முறைகளின் அறிமுகத்திற்கு வித்திட்டது. நாணயங்களின் பயன்பாட்டுக்கு வழிகோலிய இந்த நிறை மற்றும் அளவீடுகள் மிக முக்கிய வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

புரோட்டோ வரலாற்று காலப்பகுதி மற்றும் 'முந்தைய வரலாற்று காலப்பகுதி' களின் இறுதிகளிலேயே முதல் முறையாக நாணயங்களின் பாவனை அறிமுகமானது. இந்திய பிராந்தியத்தின் “punch mark” நாணயமானது ஆரம்பகால நாணய வகையாக பயன்பாட்டுக்கு வந்தது. புத்த பெருமானின் காலப்பகுதியில் இந்தியாவில் இத்தகைய நாணயங்களே பயன்படுத்தப்பட்டன. உள்நாட்டில் 3ஆம் மற்றும் 2ஆம் நூற்றாண்டுகளில் டீஊநு நாணய உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டன.  

2ஆம் மற்றும்; 3ஆம் நூற்றாண்டுகளில் உரோம ஆதிக்கத்தின் காரணமாக இலங்கை மற்றும் ஆசிய நாடுகளில் நாணயப் பயன்பாடு விஸ்தரிக்கப்பட்டிருந்தது. தங்க நாணயங்களின் அறிமுகம் நாணயங்களின் மிக முக்கிய வளர்ச்சியாக அமைந்துள்ளது. வர்த்தகம் இலங்கையில் விஸ்தரிக்கப்பட்ட பின்னர், இலங்கை 'பட்டுப் பாதை'க்கான மிக பரபரப்பான மையமாக உருவானது.

அந்தக் காலப்பகுதிலேயே மிகவும் புகழ்பெற்ற 'கஹபஹன' எனும் தங்க நாணயம் வெளியிடப்பட்டதுடன், பொலன்னறுவை தலைநகராகவும் இடம்மாற்றப்பட்டமை. மற்றுமொரு முக்கிய அபிவிருத்தியாகும். பொலன்னறுவையை முதல் முறையாக தலைநகராக ஆட்சிச் செய்த ராஜ ராஜ சோழன், தன் பெயரில் நாணயங்களை அறிமுகம் செய்த முதல் அரசனாக வரலாற்றில் பெயர் பெறுகின்றான். பெருமளவில் தனித்துவமிக்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட தெற்கின் திஸ்ஸமஹாராம நகரம் அப் பகுதியின் பெருமையைப் பறைச்சாற்றுவதாக அமைந்துள்ளது.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் இறுதியாக பிரித்தானியரின் வருகையுடன் தற்போதுள்ள பணப் பயன்பாடு தொடர்பான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த அருங்காட்சியகத்தினுள் பல வகையான நாணங்களை அதன் தனிச்சிறப்புமிக்க தரங்களின் விவரங்களுடன் காணக்கிடைக்கின்றன.
இலங்கை வங்கிப் பிரிவு

இந்தப் பிரிவில் இலங்கை வங்கியை அரச உதவி வங்கியாக உருவாக்க வழிவகுத்த இலங்கையின் தற்போதைய வங்கியியல் மற்றும் நிகழ்வுகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. 1500களின் முந்தைய காலப்பகுதியில் இடம்பெற்ற போர்த்துக்கேயர்களின் வருகையுடன் புதிய வர்த்தக சகாப்தம் தொடங்கியது. இந்த வர்த்தகம் ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் இடம்பெற்றதுடன், 1815 இல் முழு நாட்டினையும் பிரித்தானியா ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்த பின்னர் முழுமையாக நிறுவப்பட்டது.

விவசாயப் பொருட்களை ஏற்றுமதி கருதி உற்பத்தி செய்வதற்கு 19ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய வாய்ப்புகள் காணப்பட்டன. இத்தகைய பொருள் உற்பத்தியில் முதலீடு செய்தவர்கள் மிகப்பெரிய பணக்காரர்களாக உருவாகினார்கள். நிதி என்பது முக்கிய பிரச்சனையாகவிருந்ததுடன், அச்சமயத்தில் வங்கிகளும், நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகங்களும் உருவாகத் தொடங்கியிருந்தன.
அதன் பின்னர் நிதிப் பிரச்சனைகள் உருவானதன் காரணமாக பிரித்தானியா ஆளுநரின் கட்டளைக்கேற்ப ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் பரிந்துரையின் கீழேயே இலங்கை வங்கியின் உருவாக்கம் இடம்பெற்றது.

இன்றைய கணினிமயமான சூழலைப் போலல்லாது, அன்றைய வங்கிச் செற்பாடுகள் முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன. பெரும்பாலான செயற்பாடுகள் கைகளாலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தன. கரும் மையினால் ஆவணங்கள் எழுதப்பட்டன. இவை பெரும்பாலும் அழகிய கையெழுத்தினால் எழுதப்பட்டிருந்தன. அலுவலகங்களில் மிகப்பெரிய கையாலான பேரேட்டு புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டன. அதன் பின்னரேBurroughs மற்றும் Ascotta  போன்ற கணக்கிடும் கருவிகள் பயன்பாட்டிற்கு வந்தன. அத்தகைய காலப்பகுதிகளுள் பயன்படுத்தப்பட்ட அரிய கருவிகள் கூட இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தில் சுவாரசியமான ஆவணங்களின் தொகுப்பும் காட்சிப்படுத்தபபட்டுள்ளன. உதாரணத்திற்கு மறைந்த முன்னாள் பிரதம மந்திரிகளில் ஒருவரான டட்லி சேனாநாயக்க தனது தந்தையின் அதாவது இலங்கையின் முதல் பிரதம மந்திரியான டி.எஸ்.சேனாநாயக்கவின் மறைவிற்கு பின்னர் எழுதிய கடிதம் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் இலங்கை வங்கியின் முதல் பங்கு வெளியீட்டுக்கான ஆவணங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நவீன வங்கியியல் பிரிவு இந்தப் பிரிவானது பாடசாலை மாணவர்களின் கல்விசார் ஆர்வம் மீது கவனம் செலுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பார்வையாளர்கள் நவீன வங்கியியல் சூழலின் அனுபவத்தைப் பெறக்கூடியதாக உள்ளது. பல்துறை புரொஜக்டர்ஸ், தொடுதிரை காட்சிப்படுத்தல்கள் காணப்படுவதால் கல்விசார் நோக்கத்தை மேலும் வலுப்படுத்துகிறது. மேலும் அல்ட்ரா வயலட் ஒளி வசதிகள் இருப்பதால் குழந்தைகள் நாணயக் குறிப்புகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அறிந்துகொள்ள முடியும்.

தன்னியக்க ATM இயந்திரத்தைப் பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்தும் குழந்தைகள் அறிந்து கொள்ள முடியும்.தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு சகாப்தத்திலேயே நாம் தற்போது வாழ்கிறோம். ஒரு சில தசாப்தங்களுக்கு முன்னர் வரை எவராலும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு கடந்த இரு தசாப்தங்களில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தொழில்நுட்பம் பல்வேறு துறையில் உள்வாங்கப்பட்டுள்ளது. வங்கியியல் மற்றும் பணம் சம்பந்தமாக பல்வேறு தொழில்நுட்ப புத்தாக்கங்கள் எதிர்காலத்தில் ஏற்படவுள்ளன.

வங்கிச்சேவைகளை மட்டுமன்றி, வங்கிகளை நிர்வகிக்கும் விதத்திலும் தொழில்நுட்பம் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மேம்படுத்தப்பட்ட தன்னியக்க காசு இயந்திரங்கள் மற்றும் காசு வைப்பு இயந்திரங்கள் போன்றன மக்கள் பணத்தை வைப்பு செய்தல் மற்றும் மீளப் பெறல் போன்றவற்றில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

தொழில்நுட்ப மேம்படுத்தல்கள் பணத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நாணயத் தாள்களில் பலவித மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவற்றுள் வோட்டர்மார்க், பாதுகாப்பு அம்சம், பார்க்கக்கூடிய பதிவு அம்சங்கள், சிறிய பிரின்ட் மற்றும் அல்ட்ரா வயலட் ஒளியின் கீழ் ஒளிரும் கடதாசியின் பல் நிறங்களை கொண்ட நூல் போன்ற அமைப்பு போன்றன உள்ளடங்கியுள்ளன. மேலும் ஒளிபடுவதற்கேற்ப நிறம் மாறும் வகையில் அச்சிடப்பட்ட மை பயன்பாடு போன்ற அம்சங்களும் காணப்படுகின்றன.

எதிர்காலத்தில் மேலும் பல மாற்றங்கள் நிகழலாம். எமக்கு தெரிந்த வகையில் பல்வேறு 'smart” அம்சங்களுடன் பணமும் மாற்றமடைந்து வருகிறது. அதற்கான அறிகுறிகள் தற்போது தென்பட ஆரம்பித்துள்ளது. தற்போது நாம் டிஜிட்டல் தொழில்நுட்ப சகாப்தத்தில் வாழ்ந்து வருவதுடன், நாம் அறிந்த இன்றைய பணத்தில் மேலும் பல மாற்றங்கள் நிகழ்வது காலத்தின் கைகளிலேயே தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X