2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இணையவழி நூலகம் அங்குரார்ப்பணம்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

இலங்கையின் பொதுநூலக வரலாற்றில் முதன்முறையாக நூலக இணைய வழித்தேடல் மென்பொருள் அங்குரார்ப்பண நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை  பேத்தாழை பொது நூலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது நூலகத்தின் வளர்ச்சிக்காக ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் புரிந்து வரும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் எம்.என்.ரவிக்குமார் பிரதம அதிதியால் கௌரவிக்கப்பட்டார்.

இந்நூலகத்தில் இலக்கியம், அரசியல், சிறுவர் இலக்கியம் மாணவர்களுக்கான புத்தகங்கள் உட்பட பதினெட்டாயிரம் புத்தகங்கள் உள்ளதாகவும் இன்று முதல் இவ் நூலகத்தின் புத்தகங்களை இரவல் பெறுவது தொடர்பாகவும் நூலகத்தில் உள்ள புத்தகங்களின் விவரங்கள் தொடர்பாகவும் www.pplib.lnfo என்ற இணைய முகவரியூடாக இணைந்து கொள்ளலாம் என்று பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .