Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Gavitha / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதிகளில் அநாதைகளாக விடப்படும் முதியவர்களின் சொத்துகளை, அவர்களது உறவினர்கள் எவரும் அனுபவிக்க முடியாத வகையில், அந்தச் சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டங்களைக் கொண்டுவரப்போவதாக, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.
பத்தரமுல்ல, அப்பே கம பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற, மாகாண சமூகசேவைத் தலைவர்களின் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், “பாதுகாவலர் எவருமின்றி வீதிகளில் விடப்படும் முதியவர்கள், சமூகசேவைத் திணைக்களத்தின் கீழ் உள்ள முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுவர். ஆனால், அவர்களின் பெயர்களில் உள்ள சொத்துக்கள் அனைத்தும், அவர்களது உறவினர்கள் எவரும் அனுபவிக்க முடியாத வகையில், அரசுடமையாக்கப்படும். அதற்கேற்ற வகையிலான சட்டதிட்டங்கள் தயாரிக்கப்படும்” என்று, அமைச்சர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .