2025 மே 07, புதன்கிழமை

மரக்கிளை உடைந்து விழுந்ததில் சிறுமி பலி

Niroshini   / 2017 ஜனவரி 26 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

பலா மரத்தின் கிளையொன்று உடைந்து விழுந்ததில் படுகாயங்களுக்கு உள்ளான 9 வயது சிறுமியொருவர், சிகிச்சை பலனின்றி, இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

பெல்மதுளை - ஓப்பநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த தருசி பிரமோந்யா சத்சரனி என்ற சிறுமியே, இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த சிறுமி, புதன்கிழமை பகல், வீட்டுக்கு அருகிலான மரக்கறி தோட்டத்துக்கு அருகிலுள்ள வீதியில் விளையாடிக் கொண்டிருந்தவேளை, வீதி ஒரத்தில் இருந்த பலா மரத்தின் கிளையொன்று உடைந்து, சிறுமி மீது விழுந்துள்ளது.

இதில் படுங்காயங்களுக்குள்ளான சிறுமி, பெல்மதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அதனையடுத்து, சிறுமியின் நிலை கவலைக்கிடமானதால், நேற்று அதிகாலை இரத்தினபுரி வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும், போகும் வழியிலேயே அவரது நிலைமை கவலைக்கிடமாகியுள்ளது.

இதன் காரணமாக சிறுமியை, அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X