Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 14 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
சர்வதேச இராணுவ தினத்தை முன்னிட்டு, சர்வதேச இராணுவ விளையாட்டு சபையின் சார்பில் இராணுவ தளபதியின் வழிநடத்தலின் கீழ், முப்படை வீரர்கள் பங்குபற்றும் ஓட்ட நிகழ்வு, எதிர்வரும் சனிக்கிழமை (18) நடைபெறவுள்ளது.
சர்வதேச இராணுவ விளையாட்டு சபை, 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 134 நாடுகள், இச்சபையின் அங்கத்துவ நாடுகளாக உள்ளன.
ஒவ்வொரு வருடமும், பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இராணுவ வீரர்கள் அதில் பங்கேற்று வருகின்றனர். களத்தில் உள்ள இராணுவ வீரர்களிடையே நட்பை வலுப்படுத்தும் விதமாக, இந்த விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
“விளையாட்டின் ஊடாக நட்பு” எனும் தொனிப்பொருளில், காலிமுகத்திடலில் காலை ஆரம்பமாகும் இந்நிகழ்வில், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்ர விஜயகுணரத்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, முப்படைகளையும் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
முப்படைகளையும் சேர்ந்த, தெரிவுசெய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்குபற்றும் இந்த ஓட்டப்போட்டி, கொழும்பு - 02இலுள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரி வரை, சுமார் 2 கிலோமீற்றர் தூரம் வரை நடைபெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .