2021 ஜூன் 19, சனிக்கிழமை

மாணவியை பலி கொண்ட விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவு

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

(எல்.தேவ்)

மட்டக்களப்பு நகரில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணையை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில்> மட்.வின்சன்ற் பெண்கள் உயர்தர தேசியப் பாடசாலையில் க.பொ.த.சாதரண தரத்தில் கல்வி பயிலும் முனைக்காட்டை சேர்ந்த கோகிலா(16) என்ற மாணவி பலியானார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள மாணவியின் சடலத்தை பார்வையிட்ட முதலமைச்சர், தனது புதல்வியை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன் உரிய விசாரணையை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் விபத்து தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணை தொடர்பில் பொலிஸாரிடம் விபரங்களையும் முதலமைச்சர் பெற்றுக்கொண்டார் .(படப்பிடிப்பு: ஜெளபர்கான்)

alt

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .