Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2016 ஜூலை 26 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை, எதிர்;வரும் ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ. வாஹாப்தீன் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
மேற்படி சந்தேக நபர் தொடர்பில், நேற்று (25) திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 40 கிராம் கேரளா கஞ்சாவுடன் மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், உல்லாசப் பயணிகளுக்கு கஞ்சா போதைப் பொருள் விநியோகித்து வந்துள்ளார் என விசாரணையில் இருந்து தெரிவந்துள்ளதென பொலிஸார்; தெரிவித்தனர்;.
குறித்த நபரை பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ. வாஹாப்தீன் முன்னிலையில் இன்று (26) ஆஜர்செய்த போது, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .