Princiya Dixci / 2017 ஜனவரி 25 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அந்த உத்தரவு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நேற்று (24) மீளப்பெறப்பட்டது. 
ஜூரிகளின் தீர்ப்பை இரத்துச் செய்யுமாறு, ரவிராஜின் மனைவி ச இந்த மனு மீதான விசாரணை, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தீபாலி விஜேசுந்தர மற்றும் லலித் ஜயசூரிய முன்னிலையில், நேற்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன், இந்த மனு, மார்ச் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபடும் என, திகதி குறிக்கப்பட்டது.
இம்மனு, கடந்த 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேன்முறையீட்டாளர்கள் மன்றுக்கு சமுகமளிக்காததன் காரணத்தினால் மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதியரசர்கள் அறிவித்தனர்.
மேன்முறையீட்டாளர் சார்பான சட்டத்தரணி மோஹன் பாலேந்திரா, இந்த விடயத்தை மீள அட்டவணையிடக் கோரும் பிரேரணையை அன்றைய தினமே தாக்கல் செய்ததுடன், ஜனவரி 24,25 மற்றும் 26ஆம் திகதிகளில் இந்த விண்ணப்பத்துக்கு ஆதாரம் சேர்க்கவுள்ளதாகவும் பிரேரணையில் குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் பிரேரணையே நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
2006.11.10அன்று நாரஹேன்பிட்டி மாதா வீதியிலிருந்து பிரதான வீதிக்குச் செல்ல முயன்றபோது ரவிராஜ் எம்.பியும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கடற்படை அதிகாரிகள் மூவரும் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 24ஆம் திகதி முன்னிரவில், சிறப்பு ஜூரிகளின் தீர்ப்புக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர். சிகலா ரவிராஜ், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார்.
6 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025