2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

தமிழர்கள் இருவர் கடத்தல்: ஒத்துழைக்குமாறு உத்தரவு

Kogilavani   / 2017 மே 16 , பி.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்  

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில், வெள்ளை வானில் தமிழர்கள் இருவர் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை அதிகாரிகள் ஐவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்த வழக்கு நேற்று (16) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, கடற்படைத் தளபதிக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம், மேற்கண்டவாறு உத்தரவிட்டது.

2009ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில், பக்கரிசாமி லோகநாதன், இரத்தினசாமி பரமானந்தன் ஆகியோர், வானொன்றில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

அந்தக் கடத்தற் சம்பவத்துடன் தொடர்புடைய வான், வெலிசறை கடற்படை முகாமுக்குப் பின் பகுதியில் இருந்தாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் தெரியவந்தது.  

கொழும்பு பிரதான நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நீதவானிடம் விடுக்கப்பட்ட வேண்டு கோளுக்கமையவே மேற்கண்ட உத்தரவு   
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெலிசற முகாமின் அதிகாரியாக இருந்தவரும் தற்போது, கடற்படை லெப்டினன் கொமாண்டராக உள்ளவருமான தம்மிக அனில் மாபாவை, இம்மாதம் 30ஆம் திகதி திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு தற்போதைய கடற்படைத் தளபதி ஒத்துழைப்புத் தருவதில்லை என்று, குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், மார்ச் மாதம் 23ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X