Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
தனது ஒன்றுவிட்ட சகோதரனை தகராறு காரணமாக அடித்தும் வெட்டியும் கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடப்பட்டு வந்தவர் திங்கட்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பணக் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் அடித்தும் வெட்டியும் கொல்லப்பட்ட சம்பவம், ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவெடிவேம்பு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) இரவு இடம்பெற்றுள்ளது.
மாவெடிவேம்பு -1, எல்லை வீதியை சேர்ந்த கோணேஸ் ரமேஸ்குமார் (வயது 36) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவான சந்தேக நபரை புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
பணக் கொடுக்கல், வாங்கலில் நீண்ட நாட்களாக காணப்பட்ட தகராறு வாய்த்தர்க்கமாக ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி கொலையில் முடிந்துள்ளதாக உறவினர்கள் கூறினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
3 hours ago