2021 ஜூன் 16, புதன்கிழமை

மாமியார் கடித்ததில் மருமகனின் கீழ் உதட்டை காணவில்லை

Gavitha   / 2016 ஜூலை 27 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாமியரை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற போது தனது கீழ் உதட்டின் ஒருபகுதியை இழந்த மருமகனை, கிரிந்திவெலப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது மனைவி வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையில், தனது மகளைப் பாதுகாப்புக்காக, மாமியாரின் வீட்டில் தங்க வைத்துள்ள நபர், மகள் பிரத்தியோக வகுப்புகளுக்காகச் சென்றிருக்கும் போது, வீட்டில் தனிமையில் இருந்த மாமியாரை இவ்வாறு வன்புணர்வுக்குட்படுத்த முயற்சித்துள்ளார்.

எனினும், அவரிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, மருமகனின் கீழ் உதட்டின் ஒரு பகுதியை கடித்து துண்டாக்கிவிட்டு அவரிடமிருந்து தப்பிச்சென்றுள்ளார். பின்னர் தனது கடைசி மகளின் வீட்டுக்குப் பாதுகாப்புக்காகச் சென்ற மாமியார், கிரிந்திவெலப் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகநபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யும் போது சந்தேகநபரின் கீழ் உதட்டின் ஒரு பகுதியைக் காணவில்லை என்றும் சம்பவம் தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிரிந்திவெலப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .