2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நல்லூர் திருவிழாவின் போது பக்தர்களின் வீடுகளில் கொள்ளை: ரூ.19 இலட்சம் இழப்பு

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 06 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

நல்லூர் ஆலய திருவிழாவின் போது ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள வீடுகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களில் 19 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் பறிபோயுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கந்தர்மடம் பிரதேசத்திலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

'கடந்த நான்காம் திகதி, நல்லூர் தேர்த் தீரவழாவையொட்டி ஆலய சுற்றாடலில் திருட்டுக்கள் குற்றச்செயல்களை தடுக்கும் முகமாக பல நூற்றுக்கணக்கான பொலிஸார் சீருடையிலும் சிவில் ஆடைகளிலும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனால், திருவிழாவில் கலந்துகொண்டவர்களிடம் மேற்கொள்ளப்படும் திருட்டு நடவடிக்கைகள் தடுக்கப்பட்டன' என்று யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

'இருப்பினும், ஆலயத்திற்குச் சென்ற பக்தர்களின் வீடுகளில் திருடர்கள் தங்களது கைவரிசையைக் காட்டிய நிலையில் 19 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இக்கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக' யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X