2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மதுபானம், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 4 பேர் கைது

Kogilavani   / 2013 ஜூன் 15 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். ஹிஜாஸ் 

கஞ்சா மற்றும் மதுபான போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் உடப்பு மற்றும் முந்தல் பிரதேசத்தில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முந்தல் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, உடப்பு பிரதேசத்தில், சட்டவிரோதமாக  கஞ்சா பைக்கட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் மாணவரொருவரும், சட்டவிரோத மதுபான போத்தல்கள்; 22 ஐ வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கல்பிட்டி, தழுவ பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக மதுபானம் போத்தல்கள் 35 ஐ மோட்டார் சைக்கிளில் கொண்டுசென்ற மேலும் இருவர் முந்தல் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் விசாரணைகளினையடுத்து கைதுசெய்யப்பட்டவர்கள் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X