2025 ஜூலை 23, புதன்கிழமை

புத்தளத்தில் கரையொதுங்கிய சடலம்; சந்தேகத்தில் 8பேர் கைது

Menaka Mookandi   / 2012 மே 05 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம், புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் 9ஆம் வட்டார கடற்கரையோரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேற்படி சடலத்துக்குரியவரின் மரணத்துடன் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கடற்கரைப் பிரதேசத்தில் சடலமொன்று கரையொதுங்கியிருப்பதாக பொதுமக்கள் புத்தளம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து அங்கு வந்த பொலிஸார், நீதவான் விசாரணையைத் தொடர்ந்து சடலம் புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் மேலதிக வைத்திய பரிசோதனைக்காக சடலம் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

எனினும் குறித்த சடலம் அடையாளம் காணப்படாதமையினால் வைத்திய பரிசோதனை நேற்றைய தினம் செய்ய முடியாத நிலையில் குளிர்சாதன அறையில் வைக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபர் புத்தளம் 2ஆம் கட்டை எனும் இடத்தில் வசிக்கும் 61 வயதான சுகதபால என அடையாளம் காணப்பட்டதையடுத்து குறித்த சடலம் இன்று வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நபரின் மரணம் கொலை என சந்தேகிக்கும் பொலிஸார், அதனுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கும் 8 பேரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .