2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சந்திரவட்டக் கற்கள் திருட்டு: 9 பேர் கைது

Kogilavani   / 2013 ஜூன் 14 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.சீ.சபூர்தீன்

கெப்பித்திகொல்லாவ, ரஜமகா விகாரையில் சந்திரவட்டக் கற்கள் உள்ளிட்ட தொல்பொருட்கள் திருட்டு சம்பவம் தொடர்பில் 9 பேரை அனுராதபுரம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கெப்பித்திகொல்லாவ, ரஜமகா விகாரைக்கு அருகிலுள்ள தொல்பொருள் பூமியில் பெறுமதிமிக்க தொல்பொருட்கள் கடந்த 4 ஆம் திகதி இனந்தெரியாத நபர்களினால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கெப்பித்திகொல்லாவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைளை மேற்கொண்டுவந்த பொலிஸார், கெப்பித்திகொல்லாவ, மெதிரிகிரிய மற்றும் ஹிங்குரன்கொட பகுதியைச் சேர்ந்தவர்களை சந்தேகத்தின் பேரில் நேறறு வியாழக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 2 இராணுவ வீரர்கள், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் அனுராதபுரம்  குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஐ.பீ.பீ ரத்நாயக்காவின் தலைமையில்  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X