2025 ஜூலை 24, வியாழக்கிழமை

புதையல் தோண்ட முற்பட்ட 9பேர் கைது

Menaka Mookandi   / 2012 மார்ச் 01 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கட்டுபான, கனத்தயாய பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுக் காணியொன்றில் புதையல் தோண்ட முற்பட்ட 9பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் சிலவற்றையும் கைப்பற்றியதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளரும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .