2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கிண்ணியாவில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளை

Kogilavani   / 2013 ஜூன் 01 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.பரீத், கியாஷ் ஷாபி

கிண்ணியா, பெரிய கிண்ணியா பகுதியில் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளும் 6000 ரூபா பணமும் இனந்தெரியாத நபர்களினால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பாடசாலையொன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரது வீட்டிலே இக்கொள்ளைச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வீட்டு உரிமையாளாரும், அவரின் பிள்ளையும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் அவரின்
கழுத்தில் அணிந்திருந்த தங்க மாலையும் இக்கொள்ளையர்களால் அபகரிக்கப்பட்டிருப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X