2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி: 11பேர் கைது

Kogilavani   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரி.எல்.ஜவ்பர்கான்


மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதுடன் 11 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இக்கைது நடவடிக்கையின்போது பெருமளவு கசிப்பு மற்றும் கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக மாவட்ட மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலகப் பிரிவிவுகளிலுள்ள புலிபாய்ந்தகல், சிறுத்தையன்குளம் மற்றும் மருதங்குளம் ஆகிய இடங்களில் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுவரி அத்தியட்சகர் சுசாதரன் தலைமையில் இடம்பெற்ற இச்சுற்றிவளைப்பில் மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா, பரிசோதகர் கே.ஜானகடளஸ், மதுவரி உத்தியோகத்தர்களான கே.ரமேஸ்குமார், எஸ்.செல்வராஜா, எஸ்.ஜெக்குமார், கே.வர்ணசூரிய, எஸ்.ரஜனிகாந்த் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்பன வாகரை மற்றும் வாழைச்சேனை நீதிமன்றங்களில் நாளை ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மதுவரி அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X