2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அம்பாறையில் மரையை வேட்டையாடிய சந்தேகத்தின் பேரில் 12 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 மே 24 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்,எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தின் பக்மிட்டியாவ காட்டுப்பகுதியில் மரையொன்றை வேட்டையாடியதாகத் தெரிவிக்கப்படும் கிராம அலுவலக உத்தியோகத்தர் ஒருவர்,  சிவில் பாதுகாப்பு படைவீரர் உட்பட 12 பேர்  அம்பாறை மாவட்ட வனஇலாகா அதிகாரிகளினால் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட மரை மிருகத்தின் இறைச்சியும் சட்டவிரோத துப்பாக்கியும் பிக்கப் ரக வாகனம், இரு மோட்டார் சைக்கிள்கள் ஆகியன அம்பாறை மாவட்ட வனஇலாகா பாதுகாப்பு அதிகாரிகளினால் மீட்கப்பட்டு தமண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரதேச மக்கள் வனஇலாகா அதிகாரிகளுக்கு வழங்கிய தகவலை அடுத்து,  திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட அம்பாறை மாவட்ட வனஇலாகா அதிகாரி டி.பி.சியசிங்க தலைமையிலான குழுவினரும் சிவில் பாதுகாப்பு படைவீரர்களும் பக்மிடியாவ முட்புதர் காட்டுக்கு நடுவிலுள்ள குளத்துக்கு அருகில் இச்சந்தேக நபர்களை கைதுசெய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இச்சந்தேக நபர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்வி எம்.எஸ்.பிரிங்கி நேற்றுமுன்தினம்  செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .