2025 ஜூலை 23, புதன்கிழமை

பொலிஸ் ஜீப்பை தாக்கிய 12பேர் கைது

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 30 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சீ.எம்.ரிஃபாத்)

ஹங்குராங்கெத்த பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ஜீப் வண்டி ஒன்றின் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான 3 பெண்கள் உட்பட 12 சந்தேக நபர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர்.

இதன்போது 3 பெண் சந்தேக நபர்களும் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 9 ஆண் சந்தேகநபர்களையும் மே மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் ஜீப் வண்டியின் மீது கடந்த 21ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, சந்தேகநபர்கள் 12 பேரையும் நேற்று மாலை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .