2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 13 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 மே 08 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆகில் அஹமட்)

நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில்  தலைமறைவாகியிருந்த 13 பேரை இன்று செவ்வாய்க்கிழமை காலை கைதுசெய்துள்ளதாக கெக்கிராவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.பீ.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார்.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் இந்த  13 பேரையும் கைதுசெய்வதற்கான பிடிவிறாந்துகள் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

இந்த 13 பேரையும் விசேட பொலிஸ் குழுவினர் கைதுசெய்துள்ளதாகவும் விசாரணையின் பின்னர் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X