2025 ஜூலை 23, புதன்கிழமை

20 வருடங்களாக திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 20 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

சுமார் 20 வருடங்களாக  2,500க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து பணப்பை மற்றும் கைப்பைகளைத் திருடியதாகத் தெரிவிக்கப்படும் ஒருவர் சிலாபம் பொலிஸாரினால் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – சிலாபம் வழித்தட பஸ் நடத்துனராக கடமையாற்றும் இந்நபர், பணப்பை மற்றும் கைப்பைகளைத் திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்ததாகவும் இவர் அண்மையில் நீர்கொழும்பில் பெண்ணொருவரின் கைப்பையைத் திருடி, அப்கைப்பையிலிருந்த சுமார் ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான  தங்கநகைகளை அடகு நிலையங்களில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளதாகவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருட்டு நடவடிக்கைகளின் மூலம் பெறப்படும் பணத்தை போதைப்பொருள் பாவனைக்கு இவர்  செலவிட்டுள்ளதாகவும் திருட்டு நடவடிக்கைகளுக்கு  மேலாக போதைப்பொருள் விற்பனையிலும் தான் ஈடுபட்டு வந்ததாக இச்சந்தேக நபர் விசாரணையின்போது கூறியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .