2025 ஜூலை 24, வியாழக்கிழமை

கண்டியில் 21 பஸ் சாரதிகள் கைது

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 03 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

காப்புறுதி, வரி மற்றும் உத்தரவுப் பத்திரங்கள் இன்றி பயணிகள் பஸ்களைச் செலுத்திய நீண்ட தூர போக்குவரத்து பஸ் சாரதிகள் 21பேர் கண்டி பொலிஸ் போக்குவரத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட நிலையில் மேற்படி ஆவணங்கள் இன்றி குறித்த பஸ்களை இவர்கள் செலுத்தி வந்துள்ளார்கள் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேற்படி சாரதிகளின் தவறான நவடிக்கைகள் பற்றி பயணிகள் மற்றும் பிரதேசவாசிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமையவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேச பொலிஸ் நிலையங்களால் வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களை அவர்கள் வைத்திருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்களுடன் பேசவுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இந்த பஸ்கள் கண்டியிலிருந்து அவிசாவளை, வெலிமடை, மஹியங்கனை ஆகிய இடங்களுக்கு சேவையில் ஈடுபடுகின்றன.

கைது செய்யப்பட்டவர்களை கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார், இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0

  • meenawan Wednesday, 04 April 2012 08:41 AM

    தலைவரை போலவே நீங்களும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .