2025 ஜூலை 23, புதன்கிழமை

பொரளையில் 33 சந்தேகநபர்கள் கைது

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 21 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை, ரீ - 20 தோட்டப் பகுதியில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலொன்றின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 33 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தோட்டத்தில் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலின் போதே மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 5 சந்தேகநபர்கள், கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 12 சந்தேகநபர்கள், போதைப்பொருள் வைத்திருந்த 7 சந்தேகநபர்கள் உள்ளிட்ட 33பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .