2025 ஜூலை 19, சனிக்கிழமை

விற்பனை நிலையத்தில் கொள்ளையிட்ட 4 மாணவர்கள் கைது

Menaka Mookandi   / 2013 ஜூலை 03 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன், மாணிக்கப்போடி சசிகுமார்

மட்டக்களப்பு, திமிலைதீவு பிரதேசத்தில் கடை ஒன்றினை உடைத்து பொருட்கள் மற்றும் பணம் என்பவற்றினை கொள்ளையிட்ட குற்றச்சாட்டின் பேரில் 13 முதல் 15 வயது மதிக்கத்தக்க நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இம்மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களில் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறும் இருவரை சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு மற்றுமொருவரை தாயிடம் கையளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அத்துடன், இவர்கள் நால்வரையும், மீண்டும் ஜுலை 16ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி கொள்ளையிடப்பட்ட கடையின் உரிமையாளர், சம்பவ தினம் இரவு 8 மணியளவில் வழமை போன்று கடையைப் மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். இவ்வாறு அவர் வீடு சென்றதும் சென்றதும் மேற்படி நான்கு மாணவர்களும் கடையின் கூரையின் ஊடாக உள்ளே நுழைந்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துள்ளனர் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கிணங்க குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரி.சாந்தகுமார் தலைமையிலான பொலிஸ் குழுவினர், மேற்படி நான்கு மாணவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X