2025 ஜூலை 24, வியாழக்கிழமை

பௌத்த பிக்குகள் சீருடையில் கஞ்சா கடத்தியவர்கள் கைது

Kogilavani   / 2012 ஏப்ரல் 10 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா, ஆர்.அனுருத்தன்)


பௌத்த பிக்குகள் அணியும் சீருடைகளை அணிந்து வாகனமொன்றில் 4 கிலோகிராம் கஞ்சா போதை பொருளை கடத்திய சந்தேக நபர்கள் இருவரை வாழைச்சேனை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

எம்பிலிப்பிட்டி தனமன்வில பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்றுக்கொண்டிருந்த வாகனம் ஒன்றிலிருந்தே 4 கிலோகிராம் நிறையுடை கஞ்சா போதை பொருளும் பௌத்த பிக்குகள் அணியும் சீருடைகளும் கைப்பபற்றப்பட்டுள்ளன.

எம்பிலிப்பிட்டி தனமன்வில பிரதேசத்தில் இருந்து கஞ்சாப் பொதிகளை ஏற்றிக் கொண்டு வாகனம் ஒன்று வாழைச்சேனை மாவடிச்சேனை பகுதி வீடொன்றில் நிற்பதாக வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எம். காமினி தென்னக்கோனுக்குக் கிடைத்த இரகசியத் தகவலினைத் தொடர்ந்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் சுற்றுச் சூழல் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம்.காலிதீன் தலைமையில் சென்ற குழவினர் வாகனத்தை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவீர தெரிவித்தார்.

இச்சந்தேக நபர்கள் கஞ்சாப் பொதிகளை கடத்திவரும் வேளையில் பொலிஸ் மற்றும் ஏனைய பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகப்படாத வகையில் பௌத்த பிக்குகளின் சீறுடைகளை அணிந்து வந்துள்ளதாக முதல் கட்ட விசாரணைகள் மூலம் தெரிய தெரியவந்துள்ளது.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .