2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த 5 சந்தேக நபர்கள் கைது

Suganthini Ratnam   / 2013 மே 13 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பில்  தேடப்பட்டு வந்த 5 சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

கடந்த வருடம் 05.10.2012 கித்துள்வௌ நாகதம்பிரான் கோவிலுக்குச் சென்றிருந்த பெண் ஒருவரின் 3 இலட்சத்து 19 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கத் தாலிக்கொடியை கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றிருந்ததாக கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்திருந்தார். 

இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வந்த பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து இந்தச் சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக  கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் இந்தத் தாலிக்கொடியை வாங்கியதாகக் கூறப்படும் வர்த்தகரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தாலிக்கொடி உருக்கிய நிலையில் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். 

உருக்கிய நிலையில் கைப்பற்றப்பட்ட தாலிக்கொடியுடன் சந்தேக நபர்களை  இன்று திங்கட்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X