2025 ஜூலை 19, சனிக்கிழமை

யுவதி மீது வல்லுறவு: 54 வயது நபருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2013 ஜூலை 10 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

17 வயது யுவதியை பாலியல் வல்லுறவு புரிந்த 54 வயது நபரை 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறும் பாதிக்கப்பட்ட யுவதியின் ஆடைகளை இரசாயன பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்குமாறும் யாழ்.நீதவான் நீதிபதி மா.கணேசராசா உத்தரவிட்டார்.

முல்லைத்தீவு பாலிநகர் பகுதியில் 17 வயது யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மேற்படி நபர் முல்லைத்தீவு பொலிஸாரினால்  கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மேற்படி வழக்கினை விசாரணைக்கு எடுத்துகொண்ட முல்லைத்தீவு நீதவான்  யுவதியின் மருத்துவ அறிக்கையின் பிரகாரம் சந்தேக நபரான வயோதிபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்துள்ளதுடன், யுவதி அணிந்திருந்த ஆடைகளை கொழும்பு இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு  அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X