2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பிறைந்துரைச்சேனையில் இளைஞர்கள் எழுவர் கூரிய ஆயுதங்களுடன் கைது

Kogilavani   / 2013 ஜூன் 06 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கூரிய ஆயுதங்களை வைத்திருந்த இளைஞர்கள் ஏழுபேர் கைது செய்யப்பட்டு  வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரால் இச் சுற்றிவளைப்பு தேடுதல் இன்றுக் காலை 5 மணி முதல் 8 மணி வரை மேற்கொள்ளப்பட்டது.

வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற கோஸ்டி மோதலில் இரண்டு இளைஞர்கள் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்திருந்தனர்.

அத்துடன், அவ்விடத்தில் கைக்குண்டுத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது.  இதனையடுத்தே  இராணுவத்தினரால் இந்த சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போதே கூரிய ஆயுதங்களை வைத்திருந்த இளைஞர்கள் ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இளைஞர்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X