2025 ஜூலை 19, சனிக்கிழமை

103 பவுண் நகை கொள்ளை: சந்தேகத்தில் மாநகர சபை உறுப்பினர் கைது

Kogilavani   / 2013 ஜூலை 09 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற 103 பவுண் நகைகள் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் யாழ். மாநகர சபை உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாநகர சபை உறுப்பினரான சதர்சிங் விஜயகாந் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி சஞ்சீவ ஜெயக்கொடி தெரிவித்தார்.

யாழ். கொக்குவில் பகுதியில் அண்மையில் நடைபெற்ற பாரிய கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த திங்கட்கிழமை (8) மாலை யாழ்.திருநகர் பகுதியைச் சேர்ந்த மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையினை தொடர்ந்து யாழ்.மாநகர சபையின் உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் சந்தேகத்தின்
பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் 103 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து வீட்டு உரிமையாளர் கொள்ளை சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X