2025 ஜூலை 21, திங்கட்கிழமை

11 இலட்சத்து 50 ஆயிரம் பணமும் 50 பவுண் நகையும் கொள்ளை

Kogilavani   / 2013 மார்ச் 09 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்லாஹ்

புத்தளம் நகரிலுள்ள வியாபாரி ஒருவரின்  வீட்டிலிருந்த  11 இலட்சத்து 50 ஆயிரம் பணமும் 50 பவுண் தங்க நகைகளும் காணாமல் போயுள்ளதாக புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

புத்தளம் ஆனந்த மாவத்தையிலுள்ள சுனில் விக்ரமசிங்க என்வரின் வீட்டிலேயே இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

வீட்டை சோதனை செய்வதாக கூறி பொலிஸாரின் சீருடையில் 6 பேர் வநததாகவும் அக்குழுவினர் வீட்டை சோதனை செய்துவிட்டு சென்றபின்  வீட்டில்  வைக்கப்பட்டிருந்த  11 இலட்சத்து 50 ஆயிரம் பணமும் 50 பவுண் தங்க நகைகளும் காணாமல் போயிருந்ததாக மேற்படி நபர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .