2025 ஜூலை 24, வியாழக்கிழமை

மன்னாரில் வீடு உடைத்து கொள்ளையிட்ட சிறுவன் கைது

Super User   / 2012 ஏப்ரல் 02 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னார், எழுத்தூர் - பெரியகாமம் கிராமத்திலுள்ள வீடொன்றின் கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஷார தலுவத்தை தெரிவித்தார்.

அத்துடன் களவாடப்பட்ட பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறித்த வீட்டின் கதவை நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற குறித்த சிறுவன் அங்கிருந்த 177,450.00 ரூபா பெறுமதியான மடி கணினி மற்றும் 3 கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை திருடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டு உரிமையாளர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, மன்னார் பொலிஸார் களவாடப்பட்ட வீட்டிற்கு அருகிலுள்ள 15 வயது சிறுவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து மேற்கொண்ட விசாரணைகள் மூலம் திருடப்பட்ட மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் சிறுவனிடம் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .