2025 ஜூலை 24, வியாழக்கிழமை

யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பியோட்டம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 03 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கைதி ஒருவர் இன்று செவ்வாய்கிழமை காலை வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளார் என யாழ்.சிறைச்சாலை பிரதம ஜெயிலர் ரவீந்திர குமார் தெரிவித்தார்.

சிறைச்சாலை காவலரிடம் தான் சிறுநீர் கழிக்க வேண்டும் எனக் கூறியுள்ள மேற்படி சிறைக்கைதி, யாழ்.போதனா வைத்தியசாலை மலசல கூடத்திற்கு பின்னால் பொருத்தப்பட்ட கண்ணாடியை உடைத்துக்கொண்டு தப்பியோடியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக ஜெயிலர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.சிறைச்சாலை பிரதம ஜெயிலர் ரவீந்திர குமார் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .