2025 ஜூலை 24, வியாழக்கிழமை

வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாக மோசடி; சந்தேக நபர் விளக்கமறியலில்

Super User   / 2012 ஏப்ரல் 04 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாரூக் தாஜுதீன்)

வெளிநாடுகளில் வேலை செய்வதற்கு விரும்பிய அப்பாவிகளை ஏமாற்று பல இலட்சக்கணக்கான ரூபாவை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை எப்ரல் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு விடுமுறை நீதிமன்ற நீதிபதி நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

குறித்த சந்தேக நபர் பல்வேறு பெயர்களை பயன்படுத்தியும் தன் வசிப்பிடத்தை அடிக்கடி மாற்றியும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடியோரை ஏமாற்றி இலட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்ததாக சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கொழும்பு மோசடி பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் இறுதியாக மோதரையை சேர்ந்த ஜே.ஜே.எஸ்.சசிகலாவிற்கு இத்தாலியில் தொழில் பெற்று தருவாதாக கூறிஜ மூன்று இலட்சம் ரூபாவை வாங்கி ஏமாற்றியுள்ளதாக கொழும்பு மோசடி பிரிவு பொலிஸார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர்.

இந்த சந்தேக நபர் தன்னை நம்பிய அப்பாவிகளை வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று ஹோட்டேல்களில் அப்பாவிகளின் செலவில் தங்கவைத்து தவிக்க விட்டு தலைமறைவாகி விடுவதாகவும் பொலிஸார் குற்றஞ்சாட்டினர்.

இவரிடம் பல்வேறு பெயர்களில் அடையாள அட்டைகள் மற்றும் கடவுசீட்டுக்களும் உள்ளதாக பொலிஸார் நீதிமன்த்தில் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர் சீதுவையில் கிறீன் கொஸ்ட் கம்பனி எனும் பெயரில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனத்தை நடத்தி வந்த போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல பெயர்களுடன் குடும்ப நடத்தி வரும் இவர் மீது நீர்கொழும்பு மற்றும் வேறு பல இடங்களிலுள்ள நீதிமன்றங்களில் பல வழக்குகள் உள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை ஏப்ரல் 10ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, மோசடி பிரிவு பொலிஸாருக்கு இவரின் சொத்துக்கள் பற்றிய அறிக்கையை பெறுமாறு அறிவுறுத்தினார்.

  Comments - 0

  • razeek Wednesday, 04 April 2012 01:23 PM

    வெளிநாட்டுல நம்மவர் எப்பிடியெல்லாம் கஸ்டப்படுறாங்கன்னு இவர்களுக்கெல்லாம் தெரியுமா? கள்ள பாஸ்போட்ல போய் மரண தண்டனையை எதிர் நோக்கி இருக்கும் ஒரு அபலை பென்னின் கதை தெரியுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .