2025 ஜூலை 24, வியாழக்கிழமை

வெள்ளைவானில் வந்தவர்களால் நவகம்புரவில் குடும்பத்தர் கடத்தல்

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 04 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று காலை 8 மணியளவில் “தமிழ்நாடு“ என்று அழைக்கப்படுகின்ற நவகம்புரவில் குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளைவானில் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது...

தனது பிள்ளையினை பாடசாலையில் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 45 வயதுடைய பாலகிருஷ்ணன் ஆனந்தன் என்பவரே இன்று காலை 8 மணியளவில் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் ஆனந்தன் வீடு திரும்பும்போது அவருக்காக காத்திருந்த வெள்ளை வானொன்று மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது. இந்நிலையில் தடுமாறி விழுந்த ஆனந்தனை பலாத்காரமாக வெள்ளை வானில் வந்த நால்வர் வானுக்குள் இழுத்துப் போட்டுள்ளனர். சம்பவத்தை நேரில் கண்ட குடியிருப்பாளர்கள் வானை தடுக்க முனைந்த போதிலும் சடுதியாக அவ்விடத்திலிருந்து வானோடு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹணவிடம் கேட்டபோது, குறித்த சம்பவம் நடத்திருப்பதை உறுதிப்படுத்தினார். எனினும் மேலதிக விபரங்களை பெற்று வருவதாகவும் விசாரணை முடிவில் தகவல் தருவதாகவும் கூறினார்.

  Comments - 0

  • அன்பாளன் Thursday, 05 April 2012 01:43 AM

    வெள்ளை வான்களை தடை செய்யணும். அதிகமாக வெள்ளை வான்கள் இருப்பதால் அதைதான் துஸ்பிரயோகம் செய்கிறார்கள்.

    Reply : 0       0

    குமார் Thursday, 05 April 2012 02:50 AM

    பெரும்பான்மையினருக்கே வெள்ளை வான் கும்பலுக்கு எதிராக எதுவும் செய்ய முடியவில்லை . தமிழர்கள் என்ன செய்ய முடியும் ?

    Reply : 0       0

    xlntgson Thursday, 05 April 2012 09:22 AM

    Jananaayagam: Paanjaali sabadhaam, thalaimudiyai mottai aditthu vida yoasanai!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .