2025 ஜூலை 24, வியாழக்கிழமை

துப்பாக்கி முனையில் கப்பம் கோரிய நபர் பொதுமக்களால் மடக்கி பிடிப்பு

Kogilavani   / 2012 ஏப்ரல் 04 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் கடை உரிமையாளர் ஒருவரிடம் துப்பாக்கி முனையில் கப்பம் கேட்க சென்ற இருவரில் ஒருவரை கடை உரிமையாளர் கத்தியால் குத்தியதையடுத்து காயமடைந்தவரை பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வெல்லாவெளி 39ஆம் கொலனிப் பிரதேசத்தில் கடை உரிமையாளரான விநாயகம் என்பவரின் கடையில் ரி.56 ரக துப்பாக்கயுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுப்பட கடை உரிமையாளர் மேற்படி இருவரில் ஒருவரின்மீது கத்தியால் குத்தியுள்ளதுடன் மற்ற நபர் தப்பி ஓடியுள்ளார்.

இச்சம்பவத்தில் காயமடைந்தவரை பொதுமக்கள் பிடித்து வெல்லாவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளடன் தற்போது அந்நபர் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .