2025 ஜூலை 24, வியாழக்கிழமை

யாழ். வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கைதி கைது

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 04 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடிய சிறைச்சாலைக் கைதி, இன்று புதன்கிழமை காலை ஏழாலை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ். சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் ரவீந்திரகுமார் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடிய கைதி யாழ்.பிறநகர் பகுதியான ஏழாலைப் பகுதியில் தலைமறைவாக பதுங்கியிருந்த வேளை யாழ். சிறைச்சாலை காவலர்களினால் இவர் கைது செய்யப்பட்டு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த கைதிக்கு மல்லாகம் நீதிமன்றில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரை நாளை வியாழக்கிழமை வரை விளக்கமறியிலில் வைக்குமாறு யாழ்.நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .