2025 ஜூலை 24, வியாழக்கிழமை

பல்வகை போதைப்பொருட்களுடன் விமான நிலையத்தில் பெண் கைது

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 03 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது பயணப் பொதிகளுள் தடைசெய்யப்பட்ட பல்வகையான போதைப் பொருட்களை மறைத்து வைத்து கடத்த முற்பட்ட பெண் ஒருவர், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கொழும்பு, கிராண்ட்பாஸில் வசிக்கும் 50 வயதான இந்தப் பெண், கொழும்பிலிருந்து இந்தியாவுக்கு பலமுறை பயணம் செய்துள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பலவகையான போதைப்பொருட்கள், சிறியளவில் போதை தரக்கூடிய பதப்படுத்தப்பட்ட பாக்கு, மூக்குப்பொடி, என்பவற்றை இவர் மறைத்து வைத்திருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவற்றை கொழும்பில், மாணவர்களுக்கு விற்பதற்காகவே இந்தியாவிலிருந்து கொண்டுவந்துள்ளார் என விசாரணைகள் மூலம் வெளிப்படையாகியுள்ளது. இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் இவர், 5 தடவைகள் இந்தியாவுக்கு போய் வந்துள்ளார் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமண வைபவமொன்றில் கலந்துகொள்வதற்காக இவர் இந்தியாவுக்குச் சென்றதாகவும் இந்தப் பொருட்களை தன்னிடம் ஒருவர் கொடுத்துவிட்டதாகவும் இவை போதைப்பொருட்கள் என தான் அறிந்திருக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

இவருக்கு 25ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டதுடன் போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .